37. கலங்கரை விளக்கம்
வெல்பி ஆணையத்தின்முன் சான்றளிப்பதற்காக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது அமைப்புகளிலிருந்து நான்கு வல்லுனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள்: மெட்ராஸ் மகாஜன் சபாவின் சார்பாக ஜி. சுப்ரமணிய ஐயர், கல்கத்தா இந்தியக் கழகத்தின் சார்பாக சுரேந்திரநாத் பேனர்ஜி, பம்பாய் மாகாணக் கழகத்தின் சார்பாக தின்ஷா எடல்ஜி வாச்சா, புனே டெக்கன் சபாவின் சார்பாகக் கோகலே.
ஆனால், இந்த நால்வருடைய பயணக் கட்டணம், தங்குமிடம், உணவுக்கான செலவுகளையெல்லாம் ஆணையம் வழங்கவில்லை. அதை அவரவர் பார்த்துக்கொள்ளவேண்டியதுதான்.
கோகலேவிடம் இங்கிலாந்து சென்று திரும்பும் அளவுக்குப் பணம் இல்லை. அவரை இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கத் தீர்மானித்த ரானடேவே இதற்கும் வழி செய்தார். அவருடைய வேண்டுதலின்பேரில் பரோடா, கோலாப்பூர் அரசர்கள் கோகலேவின் பயணச் செலவுகளை ஏற்றுக்கொண்டார்கள்.










Add Comment