Home » உரி – 23
உரி நாள்தோறும்

உரி – 23

23. மயூரமுகி

எல்லாம் இருக்கிறது. எல்லாம் இருந்தாற்போலப் பெயர்த்துக்கொண்டு பறக்கிறது. அது செந்நிலம். இது கல் பாவிய திண்ணை. அங்கொரு நீலக்கிளி. ஒரு நெல்மணி. ஒரு கூவிளம். இங்கொரு மனிதன் மட்டும் இருக்கின்றான். அவன் கைகால்கள் பிணைக்கப்பட்டு, அமர்ந்த நிலையில் உறங்கிக்கொண்டிருக்கிறான். அவன் அமர்ந்திருந்த திண்ணை இப்போது மிதக்கிறது. மெல்ல மெல்ல மேலெழுந்துப் பறக்கிறது. அவன் சுற்றிக் காண விரும்பிய தஞ்சப்புரியின் உப்பரிகைகளுக்கு மேலே தடுப்பார் யாருமற்றுக் கடந்து செல்கிறது. நகரம் தன் சிரத்தினைத் திறந்து அதன் தாள் பணிகிறது.

இருள்தான் எத்தனை வசதி மிக்கது. திறந்தே கிடக்கும் வண்ணமயமான ரகசியங்களின் மீது மையிட்டு மறைத்துவிடுகிறது. திசையெலாம் அடர்ந்து விரிந்து பரந்த அதன் பொத்தலற்ற சீலையை உரித்து உற்று நோக்கத் தெரிந்த யாருமுண்டா உலகத்தில்? எனக்குத் தெரியவில்லை. நான் அதை அறிகிறேன். அதன் அடர்த்தியினுள் ஊடுருவிச் செல்கிறேன். இருளென்றும் ஒளியென்றும் இரண்டற்ற வெளியறிந்த எனக்கு இதன் பூடகத்தை அகழ்வது ஒன்றுமில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!