39. காங்கிரீவ் அம்மையாரின் குழந்தை
சிறிது நேரத்தில், மருத்துவர் வந்துவிட்டார். தாதாபாய், வாச்சா இருவரும் நடந்ததையெல்லாம் அவரிடம் விளக்கிச் சொன்னார்கள்.
அந்த மருத்துவர் கோகலேவிடமும் நேரடியாகப் பேசினார், அதன்பிறகு, ‘நீங்கள் இருவரும் சற்று வெளியில் இருங்கள். நான் இவரைப் பரிசோதிக்கவேண்டும்’ என்றார்.
அடுத்த அரை மணிநேரத்துக்கு அந்த மருத்துவர் கோகலேவை நன்றாகப் பரிசோதித்தார், தேவையான மருந்துகளைப் பரிந்துரைத்தார், வலியுள்ள பகுதியில் தொடர்ந்து வெந்நீர் ஒத்தடம் கொடுக்கச்சொன்னார், அதன்பிறகு, ‘நீங்கள் இன்னும் இரண்டு வாரத்துக்கு இந்தப் படுக்கையை விட்டு எங்கும் நகரக்கூடாது. உங்களுக்கு முழு ஓய்வு தேவைப்படுகிறது’ என்றார்.









Add Comment