40. அதிர்ந்தது ஆணையம்
கோகலே இங்கிலாந்தில் இதய வலி கண்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்த நேரம். அவரிடம் படித்தவரும் பின்னாட்களில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான ரகுநாத் புருஷோத்தம் பராஞ்சபே என்பவர் அப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார், கோகலேவுக்கு உடல்நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டதும் அவரைப் பார்க்க வந்தார்.
என்னதான் பழைய மாணவர் என்றாலும் வாத்தியார் தன் உரிமையை விடுவாரா? நலம் விசாரிக்க வந்தவரை உட்காரவைத்து, வெல்பி ஆணையத்தின்முன் தான் பேச விரும்பிய கருத்துகளையெல்லாம் தொகுத்துச் சொல்லி எழுதச்சொன்னார் கோகலே.
இந்தியாவில் ரானடேவும் ஜோஷியும் கொடுத்த பயிற்சி, அதன்பிறகு கோகலேவின் தனிப்பட்ட படிப்பு, ஆய்வுகள், குறிப்பெடுத்தல்கள், சிந்தனைகள், வரைவெழுதல்கள் என அனைத்தும் இந்தப் புள்ளியில்தான் முழுமை பெற்றன. இந்தியப் பொருளாதாரத்தைப்பற்றிய கோகலேவின் அழுத்தமான வாதம் உருவாகிவிட்டது. அவர் வெல்பி ஆணையத்தின் வல்லுனர்களைச் சந்திக்கத் தயாராகிவிட்டார்.










Add Comment