Home » ஆசான் – 41
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 41

41. இந்தியாவின் பிரதிநிதி

வெல்பி ஆணைய வேலைகளை முடித்தவுடன், தன்னுடைய இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு ஆயத்தமாகத் தொடங்கினார் கோகலே. மே மாதத்தில் லாம்பெத், ஹேஸ்டிங்ஸ், ஜூன் மாதத்தில் டப்ளின், கிளாஸ்டர், அக்டன் ஆகிய ஐந்து இடங்களில் அவருடைய சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோகலேவின் சொற்பொழிவுகளுக்கு இங்கிலாந்து மக்களிடையில் சுமாரான வரவேற்பு இருந்தது. ஆனால், அவர் பேசிய செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் பிரிட்டன் அலுவல் வட்டங்களுக்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இந்தியச் சிக்கல்களுக்கான தீர்வை முன்வைத்து இங்கிலாந்தில் உரையாடல்கள் நடைபெறுவது அவர்களுக்குச் சற்று எரிச்சலூட்டியது. ஆனால், சட்டப்படி அதைத் தடுக்க வழியில்லை என்பதால் வெறும் முணுமுணுப்புகளோடு நிறுத்திக்கொண்டார்கள்.

இந்தச் சொற்பொழிவுகளுக்கு நடுவிலான இடைவெளியில் கோகலே இங்கிலாந்தைச் சற்று சுற்றிப்பார்த்தார். ஆனால், மற்ற பயணிகளைப்போல் புகழ் பெற்ற சுற்றுலாப் பகுதிகளைப் பார்த்து மகிழ்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் கல்வி, அரசியல் சார்ந்த இடங்களைப் பார்வையிடவும், கற்றுக்கொள்ளவும் முயன்றார் அவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!