Home » தலை இல்லாத நிலம்
இந்தியா

தலை இல்லாத நிலம்

சந்திரபாபு நாயுடு

மீண்டும் அமராவதி நகரத்தை ஆந்திராவின் தலைநகரமாக அறிவித்து அதை நிர்மாணிக்க மத்திய அரசிடம் 15000 கோடி, கோரினார் சந்திரபாபு நாயுடு. அவர் கேட்ட நிதியை அளிக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது.

நெரிசலைக் குறைக்கவும் நாட்டின் மத்தியப் பகுதியில் முதலீட்டை மேம்படுத்தவும் தென் கொரியா சேஜோங்கைத் தலைநகரமாக மாற்றியது. மக்கள் தொகைப் பெருக்கம், கடல்நீரில் மூழ்கும் அபாயம், அடிக்கடி நிலநடுக்கம் போன்ற பிரச்னைகளைச் சந்திப்பதால் இந்தோனேஷியா அதனுடைய தலைநகரத்தை ஜகார்தாவிலிருந்து போர்னியோவுக்கு மாற்றவுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் தன்னுடைய தலைநகரத்தை மாற்றியதற்கான காரணம் வேறு.

ஒரு நாடு, ஒரு மாநிலம், ஒரு மாவட்டத்திற்குக் கூட தலைநகரம் அவசியம். தலைநகரம் சரியில்லாத ஒரு நாடோ ஒரு மாநிலமோ வளர்ச்சிப் பாதையில் செல்வது அரிது. அந்த அளவுக்குத் தலைநகரம் அந்த நிலத்தின் வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது.

தலைநகரத்தை மாற்றிக் கொள்ளும் உரிமை ஒரு நாட்டிற்கு அல்லது ஒரு மாநிலத்திற்கு உள்ளது. தலைநகரத்தை மாற்றுவதற்கான காரணங்களும் நிறைய உள்ளன. வணிகப் பயன்பாடு, போக்குவரத்து வசதிக் குறைபாடு, மக்கள் தொகைப் பெருக்கம், மாசுபாடு, தட்பவெப்ப நிலை போன்றவை பொதுவான காரணங்களாக உள்ளன.

2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் தெலுங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டாகப் பிரிந்தது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஹைதராபாத். தெலுங்கானா மாநிலப் பகுதியில் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு ஆந்திராவும் ஹைதராபாத்தைத் தலைநகரமாக உபயோகித்துக் கொள்ளலாம் என இருமாநிலங்களுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆந்திர மாநிலம் இன்னொரு தலைநகரத்தைத் தேர்ந்தெடுத்து கட்டமைப்பதற்குப் பத்தாண்டுகள் அவகாசம் தேவையாக இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!