Home » அமெரிக்காவில் ஒரு கைலாசா
சுற்றுலா

அமெரிக்காவில் ஒரு கைலாசா

மொலாசியா: அமெரிக்கக் கைலாசா!
மொலாசியா என்பது 37 பேர் கொண்ட ஒரு சிறிய நாடு. அதுவும் அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உள்ள நாடு. சரியாகத்தான் படிக்கிறீர்கள். நாட்டுக்குள் ஒரு நாடு, அதற்குப் பெயர்தான் மைக்ரோ நேஷன். ‘இன்றிலிருந்து நான் கட்சி ஆரம்பிக்கிறேன்’ என்பது போல ஒரு நாடும் ஆரம்பிக்கலாம். கட்சியையாவது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒரு நாட்டுக்கு அதுவும் தேவை இல்லை.
வேடிக்கையாகச் சொன்னாலும் இது உண்மைதான். மைக்ரோ நேஷன் நாடுகள் தனித்துவமாக, சுயாதீனமாக இயங்குபவை. இவை ஐநாவால் அங்கீகரிக்கப்படாத நாடுகள் என்றாலும், பொதுவாக ஒரு நாட்டுக்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருப்பவை. நானே ராஜா நானே மந்திரி போல. இதை எங்கோ கேட்டிருக்கிறோமே என்று நினைக்கிறீர்கள் என்றால், உங்கள் யூகம் சரிதான். நித்யானந்தாவின் கைலாசா என்று சொல்லப்படும் நாடும் ஒரு மைக்ரோ நேஷன்தான். உலக வரைபடத்தில் கைலாசா எங்குள்ளது என்பதைப் பலர் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றனர். மொலாசியா அப்படியில்லை.
1977இல் உருவாக்கப்பட்ட நாடு மொலாசியா. இதை உருவாக்கியவர் கெவின் பா (Kevin Baugh). இன்றுவரை அவர்தான் இந்நாட்டின் அதிபர். ஆம், இங்கே சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறுகிறது என்கிறார் இவர். இந்நாட்டில் 37 பேர் குடியுரிமை பெற்றுள்ளார்கள். அதில் ஒரு நாயும் அடக்கம். இந்த 37 பேரும் (நாய் உள்பட) அதிபர் கெவினின் சொந்தங்கள். மொலாசியாவுக்கெனத் தனி நாணயம், கொடி, வரலாறு, பொருளாதாரம், மக்களுக்குத் தேவையான  அடிப்படை வசதிகள் எல்லாம் உள்ளதாம்.

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!