தினமும் பயணம் போகும் ரயில் பழுதடைந்து, இன்று ஓடாது என்று அறிவித்து விட்டார்கள். இனி என்ன நடக்கும்? மொத்த நாளும் ஸ்தம்பித்துவிடும். அடுத்து என்ன செய்வதென்றே புரியாது. பிரச்சினை சரியாகும் வரை காத்திருப்பதா, செலவைப் பாராமல் வேறேதாவது வண்டி பிடித்துப் போய்ச் சேர்வதா என்று தீர்மானிப்பது கடும்...
Author - ரும்மான்
கல்யாணத்துக்குத் தேதி குறித்து விட்டால் அடுத்தடுத்த காரியங்கள் தானாக நடக்கும். சீனாவும் தேதி குறித்து விட்டது. சரியாக 2030-ஆம் ஆண்டில் விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவொன்று சந்திரனில் தரையிறங்கப் போவதாக சீனாவின் விண்வெளி மையமான CNSA தீர்மானித்துள்ளது. அந்தப் பயணத்தின் வெற்றியைப் பொறுத்து 2035-இல்...
தானுண்டு தன் பாடுண்டு என்று யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்கும் நாடு ஜப்பான். பிராந்தியத்திலாயினும் சரி, உலகப் பொது விவகாரங்களிலும் சரி, அந்த நாடு அநாவசியமாகத் தலையிட்டதாகச் சரித்திரம் இல்லை. இருந்தும் இடைக்கிடையே உலகத் தலைப்புச் செய்திகளில் வந்து அமர்ந்து விட்டுப் போவதற்கு ஏதாவது அங்கே...
நவீன பனிப்போர் எதை அடிப்படையாக வைத்து நடக்கிறது? எந்த நாட்டிடம் அதிசிறந்த ஏ.ஐ. ட்ரோன் ஆயுதம் இருக்கிறது என்பதை வைத்துதான். தற்சமயம் கிட்டத்தட்ட பதினோரு நாடுகள் இந்த ட்ரோன்களை வைத்து உலகத்தை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சீனா இந்த இரு வாரங்களில் காட்டிய ட்ரோன் வித்தைகள் ஏராளம். தான் கெட்டது...
ரஷ்யாவுக்கு உக்ரைன் ஒரு ஓமப்பொடிப் பொட்டலம். இஸ்ரேலுக்கு பாலஸ்தீன் ஒரு பக்கோடா பொட்டலம். அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரண்டு வல்லரசுகளுக்கும் சிரியா ஒரு சிப்ஸ் பாக்கெட். பொழுதுபோக்காக மென்றுகொண்டிருக்க ஏதோ ஒன்று வேண்டியிருக்கிறது என்று எளிதில் கடக்க இயலாது. சிலருக்கு யாரையாவது எப்போதும் பதற்றமாகவே...
சதா சண்டையிடும் பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள், கல்யாணமே பண்ணிக் கொள்ள மாட்டார்களா என்ன? மனித இயல்பே, தெரிந்தே சவாலான சூழலுக்குள் புகுந்து விளையாடிப் பார்ப்பதுதான். அமெரிக்காவின் லூசியானாவில் பிறந்த டூ கே பெண் ‘அலீசா’ இதில் கொஞ்சம் அசாதாரண வல்லுனராக இருக்கிறாள். அவளது பிறப்பின் நோக்கமே செவ்வாய்க்...
மிக உயரமான ஒரு மலையைச் சுற்றிச் சாதாரணமாக எவ்வளவு குப்பை சேரும்? இலங்கையின் மத்தியில் அமைந்திருக்கிறது ‘சிவனொளிபாத மலை’. அதன் அடிவாரத்திலும், உச்சிக்குப் போகும் வழியிலும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இருபத்தைந்து தொன் மட்காத குப்பை சேர்ந்திருக்கிறது. இதில் ஐந்து தொன் வெறுமனே ப்ளாஸ்டிக்...
சகுரா மலர்களுக்கொரு சிறப்பம்சம் இருக்கிறது. ஜப்பானின் தெருக்களை இருவாரங்களுக்கு ‘பேபி பிங்க்’ வண்ணத்தில் திளைக்க வைத்தாலும், இம்மலர்களின் வர்ணம் அதுவன்று. அவை நிறமற்ற கண்ணாடி மலர்கள்! சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும் விதத்திலேயே அவை இளஞ்சிவப்பாகத் தெரிகின்றன. ஜப்பானை நினைத்தாலே இந்த மெல்லிய மலர்கள்...
நம்பர் ஒன் ஆக வருவது எப்போதுமே நல்லது என்றில்லை. இலங்கை சில காலமாகவே பலவித பலான உலகத் தரப்படுத்தல்களில் முதலிடத்தைப் பிடித்து மானம் போய் நின்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர், இப்போது ஓர் உருப்படியான முதலிடம் கிடைத்திருக்கிறது. வழங்கியது “டைம் அவுட்” சர்வதேசச் சஞ்சிகை. உலகிலேயே, பெண்கள் தனியாகச்...
குடைபிடித்து, செருப்புமணிந்த ஒரு பெண், கொழும்பின் பிரதான தெருவொன்றின் மீது நடந்து செல்கிறாள். அவளது கையில் ஒரு முட்டை. ஒளிப்படக் கருவியுடன் படப்பிடிப்புக் குழுவினர் பின்தொடர, முட்டையை நடு வீதியில் உடைத்து ஊற்றுகிறாள். சரியாக அறுபத்தி இரண்டு செக்கன்களில் முட்டை முற்றாகப் பொரிந்து வருகிறது...