‘தோற்காதவள்’ சென்ற ஆண்டு டிசம்பரில் வெளியானது. முதல் அச்சுப் புத்தகம். புத்தகம் எழுதி முடித்து வெளியாவது, பிரசவம் போன்ற அனுபவம்தான் என்பார் ஆசிரியர். வெளியாகி ஒரு மாதம் கழித்தே அதை முழுமையாக உணர முடிந்தது.
கிண்டிலில் கமலா ஹாரிஸ் குறித்த புத்தகங்கள், தேடுபொறியில் அமெரிக்கத் தேர்தல் நிலவரங்கள், சமூக வலைத்தளங்களில் கமலா போடும் அப்டேட்டுகள் என நான்கைந்து மாதங்களாக எங்கு திரும்பினாலும் கமலாவாகவே இருந்தார். வீட்டில் பிள்ளைகள் கூட ஓ பில்லர் கேட்டர்பில்லருக்குப் பதிலாக கமலா விமலா கடைக்குப் போனா என்று விளையாடிக் கொண்டிருந்தனர்.
எழுத்துப் பணிகள் முடித்துவிட்டாலும் அட்டை அறிமுகம், அன்பாக்ஸிங், மாக்அப், புரொமோ, புத்தகக் காட்சி என ஜனவரி வரை கமலா கூடவே இருந்தார். பின்னர் ஒரு அப்பட்டமான வெற்றிடம். வாசலில் ஆசையாக வளர்த்த மல்லிச்செடியை ஆடு தின்றுவிட்டதைப் போல.
வேலி கட்டி அதே இடத்தில் வேறொரு கன்றை வைத்து வெற்றிடத்தை இட்டு நிரப்புவதுபோல பிறிதொரு தொடருக்கான தயாரிப்பும் எழுத்தும்தான் மனத்தில் விழுந்த பள்ளத்தை நிரப்புகின்றன.















Add Comment