50 கனவுக் கதை பலருக்கும் கனவாக இருக்கிற பாம்பே இன்னும் இரண்டே நாட்களில் வரவிருக்கிறது என்பதைவிடவும் லோனாவாலாவை நோக்கி லாரியில் போய்க்கொண்டிருக்கும்போதும் பார்த்துவிட்டு விட்டு வந்த பூனா திரைப்படக் கல்லூரிதான் மனம் முழுக்க வியாபித்திருந்தது. பூனா ஃபில்ம் இன்ஸ்டிடியூட் இருக்கிற ஊரில்...
Author - விமலாதித்த மாமல்லன்
![]()
49 கனவு நேற்று காடு இன்று நகரம். நேற்று டெண்ட்டு தங்கல் இன்று பெரிய கட்டடம். இப்படியே இரவும் பகலும் போல மாறி மாறி காஷ்மீர் வரை வந்துகொண்டேயிருக்குமோ என அண்ணாந்து அந்த சாம்பல் நிறக் கட்டத்தைப் பார்த்தபடி லாரியிலிருந்து டிரைவர் கொடுத்த சைக்கிளை அனாயாசமாக வாங்கி பாரை வலது தோளில்...
48 முடம் இந்தபூரிலிருந்து போய்க்கொண்டிருக்கையில் வழி நெடுக மரங்களாக இருந்தன. எங்கே போகிறோம் என்று டிரைவரிடம் கேட்டான். ‘பிக்வான். கிட்டத்தில்தான் இருக்கிறது’ என்றார். மராத்திக்காரர்களுக்கு எடுத்ததும் மராத்திதான் வந்தது என்றாலும் மராத்தி அல்லாதவர்களிடம் இந்தியிலேயே பேசினார்கள்...
47 அப்ளா மானுஸ் எல்லோரும் வெயிலில் சைக்கிள் மிதிக்கத் தான் மட்டும் லாரியில் போவது வெட்கமாக இருந்தது. இப்படியொரு துர்பாக்கிய நிலை, தனக்கு வரும் என அவன் கனவில்கூட நினைத்ததில்லை. எங்கே என்ன தின்றாலும் எப்படிச் சுற்றினாலும் வருஷத்துக்கு ஒருமுறை வந்து நான்கைந்து நாட்கள் இருந்து இரண்டு நாட்கள்...
46 அற்ப ஆயுள் விளக்கணைக்கப்பட்டுக் கூடமே இருட்டாக இருந்தது. வெளி விளக்கின் வெளிச்சம் உள்ளே மங்கலான விரவியிருந்தது. இருந்த இடத்தின் இருட்டுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. இடப்பக்கம் முழுக்கவே வலித்துக்கொண்டிருந்தது. குறிப்பாக இடக்கை மணிக்கட்டில் வலி கொன்றுகொண்டு இருந்தது. இருந்தாலும் போய்த்தானே...
45 எழுதல் நடக்கும்போது தெருவில் தடுக்கி விழுந்ததைப்போலச் சட்டென எழப் பார்த்தான். அசையக்கூட முடியவில்லை. ஒன்றுமே தெரியாதபடிக்குக் கும்மிருட்டு. ஊன்றி எழ முயன்றான். இடது கை என ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. பெரிதாக எதோ ஆகிவிட்டது என்பதே அப்போதுதான் உறைக்க ஆரம்பித்தது. இடது பிருஷ்டத்தை...
44 விழுதல் சிறுவயதிலிருந்தே கொட்டிக்கொள்ள மட்டுமே வீட்டிற்கு வருவதாகவும் மற்ற நேரமெல்லாம் வெளியிலேயே திரிந்துகொண்டிருக்கிறான் என்றும் அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்தவன், சம்பாதிக்க ஆரம்பித்ததும் கொட்டிக்கொள்வதும் வெளியில் என்று ஆகிவிட்டிருந்ததால் தன்னை முழுக்க முழுக்க வெளியுலக மனிதன் என்று...
43 ரெபல் சோலாப்பூரிலிருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே பள்ளியைப் போன்ற கட்டடத்தில் ரேலி நிறுத்தப்பட்டது. எப்போதும் சாலையில் கொடுக்கப்படும் சிற்றுண்டி என்ன கட்டடத்தில் வைத்துக் கொடுக்கப்படுகிறது என்று அத்துலிடம் கேட்டான். அங்கேதான் தங்கப்போகிறோம் என்று வந்த பதில் வியப்பாக இருந்தது. மகாராஷ்ட்ரா...
42 ஈர்ப்பு ஈர்ப்பென்பது இயல்பு என ஏற்றுக்கொள்பவர்கள்கூட நம் வீட்டில் நடக்காதவரை நல்லது என்றுதான் உள்ளூர நினைக்கிறார்கள். பெற்றவர்கள் அப்படி நினைப்பதைப் பெரிய தவறென்றும் சொல்லிவிடமுடியாது. வாழ்க்கை என்ன கல்லூரிப் பேச்சுப்போட்டியா, கப்பின் மீது கண்ணை வைத்தபடி கண்மூடித்தனமாய் காதலை ஆதரிக்க. அவர்கள்...
41 மண்ணும் மனிதர்களும் ‘சுதீர் – சுதீர்’ என்று இருவரையும் அறிமுகப்படுத்திவைத்தான். அச்சா என்று சிரித்தபடி கைகொடுத்தான் சுதீர் ரவுத். சுதீரிடம், ‘என் பெயர் சி ஆர் சுதீந்தர். வீட்டில் அழைப்பது சுதீர்’ என்றான் இவனுடைய பெரியப்பா பையன். பெரியப்பா பையன் என்று அவனைச்...












