82 மூவர் எங்கு நோக்கினும் மலைபோல் குவிந்து கிடக்கும் வெண்ணிற ஐஸ் இருமருங்கும் கூடவே வந்துகொண்டிருக்க ராணுவ டிரக்கில் உட்கார்ந்தது செல்வது சப்பரத்தில் அசைந்து நகரும் சிம்மாசனத்தைப் போல் இருந்தது. ஏழெட்டு வயதில், சட்டையைக் கழற்றி டிராயர் பாக்கெட்டில் சுருட்டி வைத்துக்கொண்டு பட்டர் பையனைப்போல பாஸாதி...
Author - விமலாதித்த மாமல்லன்
![]()
81 சும்மா ‘ஏன் நீ இந்தியனில்லையா‘ என்று இவன் திருப்பிக் கேட்டான். ‘நான் கஷ்மீரி‘ என்றவன், ‘நீ கஷ்மீரி போலப் பனியில் நடக்கிறாய்‘ என்றான். அப்போதுதான் அவன் கையில் பலகை இருப்பதைக் கவனித்தான். அதை ஸ்லெட்ஜ் என்றுதானே ஆங்கிலத்தில் சொல்வார்கள். கேட்டுத் தப்பாகிவிட்டால்...
80 இண்டியா வைஷ்னோ தேவியில் தூரத்தில் தெரிந்த மலைகளில் ஒன்றின் அடிவாரத்தில் நின்றுகொண்டிருப்பதான நினைப்பில் மனம் விம்மிற்று. அதிலும் தன்னந்தனியாக நிற்கிறோம் என்கிற நினைப்பே தூக்கி உச்சியில் வைக்கப் போதுமானதாக இருந்தது. உருட்டிக்கொண்டு மேலே செல்லப் பாறாங்கல் இல்லையென்றாலும் நாம் கூட சிசிஃபஸ்தான்...
79 விலங்கு நான்கு மாதங்களாய் நாலு நாலரைக்கு எழுந்துவிடும் கூட்டம், செய்ய ஒன்றுமில்லை என்பதால் நம்மைப்போல நெடுநேரம் கழித்தே அன்று எழுந்திருக்கும் என்று விழிப்பு வந்த பின்பும் சோம்பலாய் கண்களை மூடிப் படுத்திருந்தவன், எவ்வளவு நேரம்தான் இப்படியே இருப்பது என்று போரடிக்கவும் எழுந்து உட்கார்ந்தான்...
78 ஏமாற்றம் கண்ணுக்குத் தெரியாமல் சாலையை ஈரமாக்கிக்கொண்டிருந்த சன்னமான தூறலில் வண்டிகள் கிளம்பத் தயாராக உறுமிக்கொண்டு நின்றிருப்பது தங்கவைக்கப்பட்டிருந்த ஓட்டல் அறை ஜன்னலில் தெரிந்தது. ஐயோ பஸ்ஸா. பஸ் என்றாலே டீசல் ஆயிற்றே. டீசல் வாடையே நமக்கு ஆகாதே. வாந்தி வருமே. ஜம்முவிலிருந்து கட்ரா வந்ததே...
77 திருப்பம் மதுரையின் ஆளற்ற தார்ச் சாலையிலிருந்து பார்ப்போருக்கு, காவியில் இருக்கிற தான், கொஞ்சங்கொஞ்சமாய் வெளிப்படவேண்டும் என்று திட்டமிட்டு மணல் முகட்டில் ஏறிப் பின்புறமாய் இறங்க நினைத்தது முள் செடிகளால் கைகூடாமல் போனதற்கு மாறாக, எதிர்பார்ப்பு ஏதுமின்றிப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தவன் எதிரில்...
76 வெறுமை ஜோடோ பாரத். பாரத் மதாகீ ஜெய் என்று உற்சாகமாகக் கோஷமிட்டபடி சைக்கிள்கள் மைதானத்திற்குள் நுழைந்தன. இறுதியை எட்டிவிட்டோம் என்பதே உற்சாகத்திற்கான உண்மையான காரணமாக இருக்கவேண்டும். கன்யாகுமரியில் புறப்பட்டது முதல் அதுவரை கட்டுக்கோப்பாக ஓட்டிக்கொண்டு வந்தவர்கள் சைக்கிள்களை அப்படி அப்படியே...
75 போர்க்களம் ஜாலியன்வாலா பாக், அங்கிருந்து ரொம்பப் பக்கம் என்பதைக் கேள்விப்பட்டதும் இருப்புக்கொள்ளவில்லை. பொற்கோவிலிலிருந்து கிளம்பி துர்கைக் கோவிலில்தான் அன்றைய தங்கல் என்று வேறு, ஒரு செய்தி உலவிக்கொண்டிருந்தது. சீக்கியர்களுக்கு ஒரு நாள் இந்துக்களுக்கு ஒரு நாள் என்று சமன் படுத்துகிறார்களோ எனத்...
74 ரோஸ் மில்க் வண்டி எண் பத்து என்பதால், ஐந்தாவது ஜோடி சைக்கிளாக இருந்த இவனுக்கு மாடியில் அடுக்கப்பட்டிருந்த மூட்டைகளும் நடுவே இயந்திரத் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்த ராணுவ வீரரும் தூரத்திலேயே தெரியத் தொடங்கினர். அந்தக் காட்சியே முதுகுத் தண்டை சிலிர்க்கவைப்பதாக இருந்தது. ரேலி, வளாக வாயிலை...
73 நோ எஸ்கேப் உயிர்போகும் அளவுக்கு சிரமத்தைக் கொடுத்த உனா ஏற்றம் ஹோஷியார்பூருக்கு இறங்கும்போது எதிர்பார்த்த அளவுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மலைப்பாங்கான புனலூரிலிருந்து சமதள செங்கோட்டைக்கு இறங்கியதைப்போலக் கிடுகிடுவென சரியாதது கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. கிண்டலடித்தாலும் பரவாயில்லை என்று...













