Home » நீ வேறு, நான் வேறு – 7
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 7

7. வாரிசுக் காலம்

நியாய தர்மம் என்று ஒன்று உள்ளது. மனச்சாட்சி என்று இன்னொன்று உள்ளது. நடைமுறை சௌகரியம் என்று வேறொன்றும் உள்ளது. இந்த மூன்றில், எதன் அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தாலும் பலூசிஸ்தானை ஆள வேண்டும் என்று பலூச்சிகளைத் தவிர வேறு யாருக்கும் ஆசை எழாது. அவர்களுக்கு அது பூர்வீக நிலம். ஆகக் குறைந்தபட்சம் ஐயாயிரம் வருட பாத்தியதை இருக்கிறது. எனவே அவர்கள் அங்கே தங்களைத் தாங்களே ஆண்டுகொண்டு வாழ விரும்புவது சரி. ஆனால் படையெடுத்தவர்களும் சரி; பக்கத்தில் சற்றுத் தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தவர்களும் சரி; பக்கத்து வீட்டாருமே சரி. முதல் இரண்டு காரணங்களைக் கண்டுகொள்ளாமல் கடந்தாலும், மூன்றாவது காரணத்தைப் பொருட்படுத்தியிருக்க வேண்டும்.

ஏனெனில் பலூச்சி அல்லாத யாரும் பலூசிஸ்தானை ஆள்வது அத்தனை எளிதல்ல. மக்களை விடுங்கள். மிரட்டி ஒரு வழிக்குக் கொண்டுவந்துவிடலாம். ஆனால் இயற்கையை ஒன்றும் செய்ய முடியாதல்லவா?

முதல் பெரும் பிரச்னை, பலூசிஸ்தானின் இருப்பிடம். அன்றைய இரானியப் பேரரசு, ஆப்கானிஸ்தான், பழைய வரைபடங்களில் காணக் கிடைக்கும் அகண்ட இந்தியா என்று மூன்று பெரும் நிலப்பரப்புகளுக்கும் அது ஒரு கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தம். மேற்படி மூவரில் யார் எந்தப் பக்கம் போக வேண்டுமென்றாலும் அங்கே வந்து தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான் திசை மாற வேண்டும். தவிர கலாட்டின் காலநிலை குறித்து ஏற்கெனவே பார்த்தோம். இதமான குளிர் என்பது வேறு. ரஷ்யா போன்ற பனிப் பிரதேசக் குளிர் என்பது வேறு. இங்கே உள்ள குளிர் பெரும்பாலும் அந்நியர்களால் சகிக்க முடியாத குளிர். ஒரு மாதிரி வறட்டுத்தனமான, முரட்டுத்தனமான, குத்தும் குளிர். பாலை நிலம் வேறு. எளிதாகக் கடந்து சென்று வரப் பட்டுப்பாதைகள் ஏதும் அக்காலத்தில் போடப்பட்டிருக்கவில்லை. பாலைப் புயல், குளிர்ப்புயலாகவும் உருக்கொண்டு தாக்கத் தொடங்குமானால் எப்பேர்ப்பட்ட படைகளும் சுருண்டு விழுவதைத் தவிர வேறு வழியில்லை.

அதுகூடப் பரவாயில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலாட் சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பிராந்தியங்களில் பெரிய விவசாய சாத்தியங்கள் இருக்கவில்லை. எனவே அதன் வழி வருமானம் என்பது கிட்டத்தட்ட அறவே கிடையாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!