Home » நீ வேறு, நான் வேறு – 8
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 8

8. கணக்குகளும் பிணக்குகளும்

உலகின் சில பகுதிகளில் வசிப்பவர்களுக்குப் பெரிய சிரமங்கள் இராது. வாழ்க்கை பெரும்பாலும் இன்பமாக இருக்கும். நார்வே, டென்மார்க், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளைக் கூர்ந்து கவனித்தீர்களென்றால் புரியும். நவீன காலத்தில் கூட்டணிக் காரணங்களால் சில போர்களுக்கு இந்த நாடுகள் தமது வீரர்களை அனுப்பலாம். அதிலுமே மருத்துவ உதவி செய்ய அனுப்புகிறேன், வீரர்களுக்கு சட்டைத்துணி தைத்து அனுப்புகிறேன், சாப்பாட்டு கேரியர் அனுப்புகிறேன் என்று கழண்டுகொள்ளும் நாடுகள் உண்டு. போர் என்றால் அழிவுதான் நிகரம் என்பதைப் புரிந்துகொண்ட நாடுகள் இவை. பெரும்பாலும் உலகப் போர்களின் விளைவுகளிலிருந்து பாடம் படித்தவர்கள். படித்ததைச் செயல்படுத்துவதால் சொகுசாக இருப்பவர்கள்.

ஆனால் இவர்கள் மிகச் சிறுபான்மையினர் மட்டுமே. இன்றுவரை போர் வெறி குன்றாத அமெரிக்காவும் ரஷ்யாவும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் யுத்தங்களை நடத்திக்கொண்டேதான் இருக்கின்றன. அப்படிப் போர் நடக்கும் நாடுகளில் நிம்மதி இருப்பதில்லை. அவற்றால் பெரிய வளர்ச்சியையோ தன்னிறைவையோ காண முடிவதில்லை. அப்படியொரு நிம்மதியை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதில் உத்தமோத்தமர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

இன்றைக்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் அப்படி. இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர் அந்தத் திருப்பணியைச் செவ்வனே செய்த நாடுகளுள் பிரிட்டன் தலையாயது. பிரிட்டனின் காலனி ஆதிக்க வரலாறு மிகப் பெரிது. அது தனிக்கதை. இங்கே அதற்கு இடமில்லை. ஆனால் பலூசிஸ்தான் எப்படி அதன் பிடியில் விழுந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

தொடக்கத்தில் பலூசிஸ்தான் பிரிட்டனின் நாடுபிடிப் பட்டியலிலேயே இல்லை. இந்தியாவுக்கு வந்தவர்கள் அடுத்தபடியாக ஆப்கனிஸ்தானைத்தான் குறி வைத்தார்கள். அன்றைய புவியியல் எல்லைக் கோடுகளின் அடிப்படையில் இந்தியாவின் மேற்கே இருந்த பெரிய நாடு அதுதான் அல்லவா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!