Home » நீ வேறு, நான் வேறு – 11
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 11

11. அங்கே என்ன சத்தம்?

பொதுவாக மனித குலத்துக்கு உப்புமா பிடிக்காது என்று சொல்லப்படும். ஆனால் நாம் வாழ்வில் அதிகம் அருந்திய சிற்றுண்டி அதுவாகத்தான் இருக்கும். உப்புமாவை வெறுத்தாலும் மனைவியை வெறுக்க முடியாது. மறுவேளை சோறு பிரச்னையாகிவிடும் என்பது எளிய காரணம். மனைவி இனம் இருக்கும் வரை உப்புமா இருக்கும். இது புரிந்தவர்கள், கடாயின் அடியில் இருந்து சுரண்டி எடுக்கும் காந்தலையும் ருசி என்று சொல்வார்கள்.

வரலாறும் ஒரு விதத்தில் உப்புமாவை நிகர்த்ததுதான். சுரண்டினால் வெளிப்படும் காந்தலும் அது சார்ந்த கசப்புணர்வும் என்றென்றும் உள்ளவை. நிராகரித்துவிட்டு இன்னொன்றைத் தேடிச் செல்லவும் வழியில்லை. வழிநடத்துவது  பேரரசுகள். வாழ்வளிப்பதும் வறுத்தெடுப்பதும்கூட அவைதாம்.

சென்ற அத்தியாயத்தில் இரானுக்கும் ஆப்கனிஸ்தானுக்கும் பலூசிஸ்தானின் பகுதிகளை பிரிட்டிஷ் பேரரசு கொஞ்சம் கொஞ்சம் பிய்த்துக் கொடுத்ததை ஒரு வரியில் கடந்துவிட்டோம். அப்படிக் கொடுப்பதற்கு முன்னாலும் அந்நிலத்தின் சதை கூறு போடப்பட்டுக்கொண்டேதான் இருந்தது. குறிப்பாக அன்றைய பெர்சியப் பேரரசு, பலூசிஸ்தானின் மேற்குப் பகுதிகளை மொத்தமாக அபகரித்துக்கொள்ளக் கணக்கற்ற முறை முயற்சி செய்திருக்கிறது. நாசிர் கானுக்கு முந்தைய காலக்கட்டத்தில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உலக வரைபடத்தில் மேற்கு பலூசிஸ்தான் பிராந்தியமே இராது. அது பெர்சியப் பேரரசின் பகுதியாகவே இருக்கும். அந்தப் பகுதியில் வசித்து வந்த பலூச்சிகள் அந்நாள்களில் அந்த ஆக்கிரமிப்பை எப்படி எதிர்கொண்டார்கள், எதிர்த்தார்களா, விரும்பினார்களா, அடங்கிப் போனார்களா, அடக்கி வைக்கப்பட்டார்களா என்பதுகூட வெளியுலகுக்குத் தெரியாது. சுதந்தர பலூசிஸ்தான் சார்ந்த அவர்களது விருப்பமோ விழைவோ முயற்சிகளோ எடுபடாமல் போகச் செய்வதற்கென்றே தனியொரு உளவுப் பிரிவை அந்தப் பிராந்தியத்தில் நிறுவி, அம்மக்களை நிரந்தரமாகப் பிரித்து வைக்கப் பார்த்தது இரான்.

இதனை அவர்கள் மிகவும் திட்டமிட்டு, நுணுக்கமாகச் செய்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!