Home » நீ வேறு, நான் வேறு – 22
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 22

22. நண்பனே, நண்பனே.

மிர் அஹ்மத்யார் கானுக்கு முகம்மது அலி ஜின்னாவின் மீதிருந்த அன்பு, மதிப்பு, மரியாதை, நட்புணர்வு, அனைத்துக்கும் மேலான நம்பிக்கை – இவற்றை மையமாகக் கொண்டு உணர்ச்சிகரமான, நல்ல திரைக்கதை எழுத முடியும். உலகின் எந்த மொழியில், எந்த நாட்டில், எக்காலத்தில் அதனைப் படமாக எடுத்தாலும் தீ வைத்தாற்போலப் பற்றிக்கொண்டு பரவும். நிகரற்ற வெற்றி அடையும். இதில் சந்தேகமே தேவையில்லை.

கலாட்டின் மன்னராக இருந்தாலும் ஜின்னா விஷயத்தில் அவர் நெடுங்காலம் ஒரு ரசிகராகவே இருந்திருக்கிறார். தொடக்கத்தில் இருந்த வழிபடு மனநிலையை அந்த துரோகக் காட்சி அரங்கேறும்வரை தக்க வைத்துக்கொண்டிருந்திருக்கிறார். கலாட்டுக்கு ஜின்னா வருகிறார் என்றால் மன்னருக்கு உறக்கம் இல்லாமல் போய்விடும். பதற்றம் கூடி, வேளைக்குச் சரியாகச் சாப்பிடக்கூட மாட்டார். தலைபோகிற வேலைகள் என்ன இருந்தாலும் தள்ளி வைத்துவிட்டு, ஜின்னாவை எப்படி வரவேற்பது, அவரை எப்படி மகிழ்ச்சிப்படுத்துவது, அவருக்குப் பிடித்த எல்லாம் சரியாக இருக்கிறதா, முகம் சுளிக்கும்படி ஏதுமில்லாமல் உள்ளதா என்று ஒவ்வொன்றையும் அவரே முன்னின்று கவனிப்பார். ஜின்னா தங்குமிடம், அமரும் இருக்கை, படுக்கும் படுக்கை, உண்ணும் மேசை வரை அவரே ஆராய்வார். எல்லாம் தயார் என்று முழுத் திருப்தி வந்த பின்பு வரவேற்பு ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கும்.

அந்நாளில் பிரிட்டிஷ் இந்திய வைசிராய் எங்கே போனாலும், எந்த விழாவில் கலந்துகொண்டாலும் அவருக்கு இருபத்தொரு குண்டுகள் முழங்க வரவேற்பளிப்பது வழக்கமாக இருந்தது. கலாட்டின் மன்னர், ஜின்னா அங்கே வரும்போதெல்லாம் அதே போல இருபத்தொரு குண்டுகள் முழங்க வரவேற்பு அளிப்பார். இவைபோக, ஜின்னா பலூசிஸ்தானுக்கு வரும்போதெல்லாம் அவரை மகிழ்விக்க விலையுயர்ந்த பரிசுகள் தருவது, ஜின்னாவின் இறுதிக்காலம் வரை அவரது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பக்கத்துணையாக இருந்த அவரது சகோதரி பாத்திமாவையும் அதே தரத்தில் வைத்துச் சீராட்டுவது என்று ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வார். கலாட்டுக்கு ஜின்னா வருகிறார் என்றால் அவருக்கு மன்னரின் மெய்க்காப்பாளர்கள்தாம் காவலுக்குச் செல்வார்கள். 1943 ஆம் ஆண்டு பம்பாயில் ஜின்னாவின் மீது ஒரு கொலை முயற்சித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. கேள்விப்பட்ட கலாட்டின் மன்னர் துடித்துப் போனார். மறுநாளே தனது நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர்கள் சிலரை ஜின்னாவின் பாதுகாப்புக்காக பம்பாய்க்கு அனுப்பி வைத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!