Home » அதிகார நந்தி – 14
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 14

வெறிநோய்

பொதுவாகப் பெருந்தலைவர்களின் படுகொலைச் சம்பவங்கள் நாட்டை அதிர வைக்கும். இரட்டை கோபுரம், பொற்கோவில், அல் அக்ஸா போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் மீதான தாக்குதல்களும் நிலைகுலையச் செய்யும். ஆனால் யாருக்குமே தெரியாத ஒரு பள்ளி மாணவனின் கொலை, உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்குமா?

வைக்கும். இது ஊடகங்களுக்கு இருக்கும் சக்தி. மக்களின் சக்தி! கொஞ்சம் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டுச் சமூகத்தைப் பார்க்கலாம். இது போன்ற பாகுபாடு கறுப்பினத்தவர்களுக்கு மட்டும் நடப்பது இல்லை. நம் ஊரில்கூட நடக்கிறது, ஆனால் நம் நீதிமன்றங்களும் மக்களும் ஒன்றிணைவதுதான் இல்லை!

2012 பிப்ரவரி 26 மாலை நேரம். 17 வயது டிரேவான் மார்ட்டின் என்ற கறுப்பின இளைஞன் ஃப்ளோரிடாவில் உள்ள சான்ஃபோர்டு நகரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தான். வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அந்தச் சாதாரண நடை அவனுடைய கடைசி நடையாக மாறியது.

அன்று அங்கு என்ன நடந்தது? டிரேவான் தன் தந்தையின் தோழி ப்ராண்டி கிரீனைச் சந்திக்க ஃபுளோரிடாவின் சான்ஃபோர்டு நகரத்திற்கு வந்திருந்தான். பள்ளி விடுமுறையில் அவள் வீட்டில் தங்கியிருந்தான். மாலை வேளையில் அருகிலுள்ள கடைக்குச் சென்று ஸ்கிட்டில்ஸ் மிட்டாய்களும், அரிஸோனா ஐஸ் டீயும் வாங்கிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான்.

ஜார்ஜ் ஸிம்மர்மன் என்ற பாதுகாப்புக் காவலர் டிரேவானைப் பார்த்தார். ஸிம்மர்மன், ஐந்தே முக்கால் அடி உயரம். உயரத்துக்கேற்ற ஆகிருதி. டிரேவான் ஒரு ஈர்க்குச்சியைப் போல இருக்கும் இளைஞன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!