குற்றவாளிகளைத் தண்டிப்பதைவிட, திருத்துவதே நீதிமன்றங்களின் முதல் நோக்கமாக இருக்கவேண்டும். கொள்கையளவில், இந்தியா போன்ற பண்பட்ட நாடுகள் அதைத்தான் பின்பற்றுகின்றன. இன்று இந்தியாவில் மரண தண்டனைகள் அரிய நிகழ்வுகளாகக் கருதப்படுகின்றன. அவை ஆயுள் தண்டனைகளாகக் குறைக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. இத்தகைய முன்னெடுப்புகள் ஒரு நிரபராதியைத் தூக்கிலிருந்து காப்பாற்றவல்லவை. இதன் மூலம் அவருக்குச் சட்டப் போராட்டம் நடத்த மீண்டும் வாய்ப்பு கிடைக்கிறது. அதோடு பரோல், புரொபேஷன், நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளியை முன்கூட்டியே விடுவித்தல் எனப் பல வழிகளில் குற்றவாளிகள் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கிறது இந்திய நீதித்துறை.
குறிப்பாக, குற்றவாளி இளஞ்சிறாராக இருக்கும்போது தண்டனை என்பது பெயரளவிலேயே இருக்கவேண்டும். அவர்களைச் சீர்திருத்துவதே சமூகத்தின் முதல் கடமையாக இருக்கவேண்டும். அதற்காகவே, JJB எனப்படும் இளைஞர் நீதிக் குழுமங்கள் (Juvenile Justice Boards), சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், குழந்தை நலக் குழுமங்கள் (Child Welfare Council) போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவை தம் பணியைச் சரிவரச் செய்கின்றனவா என்ற கேள்வியை முன்வைக்கின்றன குழந்தைகளுக்காகப் போராடும் சமூகநல அமைப்புகள். இளம் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டச் சலுகைகள் பெரும்பாலும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்கிறார்கள் அவர்கள்.















👏👏👏👏👏👏
வணக்கம் ஆசிரியர் அவர்களுக்கு, நான் மெட்ராஸ் பேப்பரின் வாசகி எனக்கு ஒரு சிறு வேண்டுகோள், படிக்கும் போது ஒவ்வொரு தலைப்பையும் அடுத்த விண்டோவில் பார்க்க இயலவில்லை (Open link new tap) தங்களால் இயன்றால் சரிசெய்து தரவும்.