Home » நீ வேறு, நான் வேறு – 30
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 30

30. புதிய கட்சி

அடிப்படையில் பலூச்சிகளுக்குப் பாகிஸ்தானிகளைப் பிடிக்காது. பாகிஸ்தானிகளுள் பஞ்சாபிகளுக்கும் சிந்திகளுக்கும் பலூச்சிகளைப் பிடிக்காது. இதற்கு இன, மத, மொழிக் காரணங்கள் கிடையாது என்பதுதான் இங்கே முக்கியம். பாகிஸ்தானியரிடம் எந்தச் சந்தர்ப்பத்திலும் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்ற முடிவுக்கு பலூச்சிகள் வந்துவிட்டிருந்தார்கள். பாகிஸ்தான் என்ற தேசம், ஜின்னா என்கிற மனிதரால் தோற்றுவிக்கப்பட்டது முதல் உருவாகத் தொடங்கிய கசப்பு அது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பாகிஸ்தான் அரசு என்பது ஒரு மாபெரும் பஞ்சாபி லாபி. நாட்டின் மொத்த அரசியல் அயோக்கியர்களும் அங்கிருந்தே உற்பத்தியாகிறார்கள் என்று பலூசிஸ்தானில் ஒவ்வொரு டீக்கடைதோறும் சொல்வார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்தக் கூற்று முற்றிலும் பிழையானது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் தொடக்கம் முதலே அவர்கள் பலூச்சிகளை மூன்றாம் தரக் குடிமக்களாகவே பார்த்தும் நடத்தியும் வந்திருப்பதற்குச் சரியான காரணங்கள் கிடைப்பதில்லை.

பலூச்சிகள் முரடர்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால் நம்பிக்கை வைக்கும் யாருக்காகவும் உயிரைக் கொடுக்கவும் தயங்காதவர்கள். பலூசிஸ்தானை வலுக்கட்டாயமாக இணைத்துக்கொண்டது முதல் ஒரு சந்தர்ப்பத்தில்கூட அவர்கள் நம்பிக்கை கொள்ளும் விதத்தில், அம்மக்களுக்கு உதவியாகப் பாகிஸ்தான் அரசு எதையுமே செய்ததில்லை என்பதுதான் அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணம்.

இத்தனைக்கும் பாகிஸ்தானின் மாபெரும் வருவாய்ப் பாதை அதுதான். கனிம வளம், மின்சார உற்பத்தி, கடல் வழி வணிகம் போன்ற இனங்களில் கடந்த எழுபத்தெட்டு ஆண்டுகளாகப் பாகிஸ்தானின் தேவைகளைப் பெருமளவு பூர்த்தி செய்வது பலூசிஸ்தான்தான். பதிலுக்கு அம்மக்கள் எதிர்பார்ப்பவை என்ன?

சிறிதளவு நன்றி உணர்ச்சி. லாபத்தில் பங்கு. வளர்ச்சித் திட்டங்கள். மக்கள் நலப் பணிகள். அவ்வளவுதான். நியாயமாக எந்த அரசும் தனது அனைத்து மாநிலங்களுக்கும் செய்ய வேண்டியவைதானே என்று தோன்றலாம். பாகிஸ்தான் அதனைச் செய்யாமல் விட்டதுதான் அந்த நீடித்த பகையின் அடிப்படை. காலம்தோறும் இதனைத் தட்டிக்கேட்ட பலூச்சி தலைவர்கள் ஒவ்வொருவரையும் கட்டம் கட்டித் தனிமைப்படுத்தியது, சிறைப்படுத்தியது, காணாமல் போகச் செய்தது போன்றவை அம்மக்களை ஆயுதம் ஏந்தச் செய்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!