Home » நீ வேறு, நான் வேறு – 55
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 55

55. அக்பர் புக்தி

சென்ற அத்தியாயத்தில் பெயரளவில் அறிமுகமான நவாப் அக்பர் ஷாபாஸ்கான் புக்தியை இப்போது சற்று விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். ஏனெனில் 2005 ஆம் ஆண்டு பலூசிஸ்தான், தேரா புக்தி பகுதியில் உண்டான மக்கள் எழுச்சி ஒரு போராகவே உருமாற்றம் கண்டதற்கு அவர் மிகவும் முக்கியமான காரணம். டாக்டர் ஷாஜியாவுக்கு ஒரு ராணுவ அதிகாரியினால் நேர்ந்த கொடுமையை அவர் மன்னிக்கவே முடியாது என்று சொன்னார். பொதுவாகவே பலூசிஸ்தான் பழங்குடிகள் பெண்களை மிக உயர்வாக மதிக்கும் பண்புள்ளவர்கள். தங்கள் பிராந்தியத்துக்குப் பணி நிமித்தம் வந்திருந்த ஒரு வெளியூர் (அவர்கள் வெளிநாடு என்றே சொல்வார்கள்) பெண்மணியை ஒரு ராணுவ அதிகாரி வன்கொடுமைக்கு உள்ளாக்கியதை அவர்கள் தேரா புக்திக்கு நேர்ந்த அவமானமாகவே கருதினார்கள். தங்கள் நிலத்தின் புனிதம் மாசுபட்டுவிட்டதாகச் சொன்னார்கள். பழங்குடிகளின் கட்டுப்பாடுகள், நெறிமுறைகள், நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தான் விலை கொடுத்தே தீரவேண்டும் என்று அக்பர் புக்தி சொன்னார். காத்திருந்த தேரா புக்தி மக்கள் என்ன செய்யலாம் என்று கூடிப் பேசி, பல்வேறு வழிகளை விவாதித்தார்கள். இறுதியில் எரிவாயுவிலேயே கைவைப்பது என்று முடிவு செய்தார்கள்.

சம்பவம் நடந்தபின்பு, ஒருவார காலம் அவர்கள் அமைதியாகத் தமக்குள் மட்டும் பேசி, திட்டம் தீட்டினார்கள். தாக்குதல் எதிர்பாராத விதமாக, மாபெரும் பாதிப்பை உண்டாக்கும் தரத்தில் இருக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார்கள். மிகக் கடுமையான பாதுகாப்பு வளையங்களுக்குப் பின்னால் இயங்கிக்கொண்டிருந்த சுய் எரிவாயு வயல்களை முதலில் தாக்க முடிவு செய்தார்கள். இதனை அவர்கள் இரண்டு கட்டங்களாகச் செய்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!