Home » நீ வேறு, நான் வேறு – 56
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 56

56. BLA

பர்வேஸ் முஷாரஃப். ஆப்கன் யுத்தம். பாகிஸ்தானின் அமெரிக்க ஆதரவு நிலைபாடு. பலூசிஸ்தானின் இயற்கை வளங்கள் தீவிரமாகச் சுரண்டப்பட ஆரம்பித்த சூழ்நிலை. டாக்டர் ஷாஜியாவுக்கு நேர்ந்த கொடுமை. அக்பர் புக்தியின் படுகொலை. இவற்றை மொத்தமாக ஒரு கடலை உருண்டை போல உருட்டி மெல்லத் தொடங்குங்கள். BLA என்கிற பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் பிறப்பு நிகழ்ந்ததற்கான அடிப்படை புரியும்.

பலூசிஸ்தானில் புரட்சிகர இயக்கங்களுக்கு எக்காலத்திலும் குறைவிருந்ததே இல்லை. ஒத்த கருத்துள்ள பத்து பேர் கூடினால் ஓர் இயக்கம். சிக்கல் என்னவென்றால், ‘எங்களுக்குப் பாகிஸ்தான் வேண்டாம்’ என்பதுதான் அம்மாநிலத்தின் பொதுவான ஒத்த கருத்து. அந்த வகையில் மொத்த மாநிலமும் ஒரே இயக்கத்துக்குள் உள்ளதாகச் சொல்லிவிட முடியும். ஆனால் ஆயுதம் ஏந்திப் போராட வருபவர்கள் வேறல்லவா?

பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்பது பலூச்சி போராளிகள் ஆப்கனிஸ்தானில் தங்கியிருந்த காலத்தில் உருவான ஓர் அமைப்பு. ஆனால் இதன் தோற்றத்தில் ஒரு தெளிவின்மை உண்டு. ஆயிரம் சொன்னாலும் தாலிபன் என்பது மிகத் தீவிர மதவாத அமைப்பு. என்னதான் தாலிபனுக்கு பாகிஸ்தானைப் பிடிக்காது; அதன் ஆட்சியாளர்களைப் பிடிக்காது என்றாலும் மதம் என்று வருகிறபோது சமரசமே செய்ய மாட்டார்கள். அப்படிப் பார்த்தால், தன்னை ஒரு மதச்சார்பற்ற போராளி இயக்கமாக முன்னிறுத்திய பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்குத் தாலிபன் அரசு (அரசாகச் செயல்பட்ட காலத்தில்) உதவியிருக்க வாய்ப்பில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!