போனி சேம்பர்லின்
தமிழில்: ஆர். சிவகுமார்
போனி சேம்பர்லின் (Bonnie Chamberlain)
இன்றைய இணைய உலகின் அசாத்திய வசதிகளையும் மீறி இவரைப் பற்றி எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. இவர் ஒரு பெண் என்பது மட்டும் பெயரிலிருந்து அறிய முடிகிறது. இந்தக் கதை கல்லூரிப் பாடப் புத்தகம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தொகுப்பாளரும் இவரைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. வளர்ந்த ஒவ்வொரு மனிதனும் இந்தக் கதையில் தன்னைக் காணலாம்.
என்னுடைய இளம் பிராயத்தில் ஒரு வயதான மதகுரு இந்தக் கதையை எனக்குச் சொன்னார். அந்தக் கதை எங்கிருந்து வந்தது என்று தெரிந்து கொள்ள அதன்பிறகு பலமுறை ஆர்வம் காட்டியிருக்கிறேன். யாராலும் எனக்குப் பதில் சொல்ல முடிந்ததில்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், சிசிலிய நகரம் ஒன்றில் மறை மாவட்டத்தின் பிரதான தேவாலயத்துக்கு சுவரோவியம் ஒன்றைத் தீட்டித் தருவதற்காக புகழ்வாய்ந்த ஓவியர் ஒருவர் அமர்த்தப்பட்டார். கிறிஸ்துவின் வாழ்க்கைதான் ஓவியத்தின் கரு. பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து ஓவியத்தை அவர் நிறைவுசெய்த பிறகு இரண்டு அதி முக்கியமான உருவங்கள் தீட்டப்படாமலிருந்தன. குழந்தை ஏசுவும் யூதாஸும். அந்த இரண்டு உருவங்களுக்கான உருமாதிரிகளை அந்த ஓவியர் பல இடங்களிலும் தேடினார்.
இந்த கதையை இதற்கு முன் எங்கோ வாசித்து இருக்கிறேன். பிறக்கும் போது எல்லோரும் நல்லவரே அவனை இந்த சமூகம் தான் தொடர்ந்து நல்லவனாகவோ அல்லது தீயவனாகவோ உருமாற்றுகிறது என்ற அருமையான கருத்தை சொல்லும் கதை. பகிர்வுக்கும் வாசிக்க கொடுத்தமைக்கும் மிக்க நன்றி. நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு