Home » புற்றில்வாழ் அரவம் அஞ்சேன்! – ஒரு டாக்டரின் சாகசக் கதை
மருத்துவ அறிவியல்

புற்றில்வாழ் அரவம் அஞ்சேன்! – ஒரு டாக்டரின் சாகசக் கதை

ஜார்ஜினா லாங்

கடந்த ஆண்டு மூளைப் புற்றுநோயால் (Glioblasma) பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவப் பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோலியர் தன்னுடைய சொந்த ஆராய்ச்சியின் மூலம் சுயசிகிச்சையை மேற்கொண்டு புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார். இந்தப் புற்றுநோய் பாதித்தவர்கள் அதிகபட்சம் பன்னிரண்டு மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும்.

மெலனோமா ஆராய்ச்சிக்காக ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐம்பத்து ஏழு வயதான பேராசிரியர் மருத்துவர் ரிச்சர்ட் ஸ்கோலியர் ஐரோப்பியா நாடுகளில் பயணம் செய்து மருத்துவ மாநாடுகளில் கலந்துகொண்டு விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார். மெலனோமா, அதாவது “கருப்பு கட்டி” என்பது தோல் புற்றுநோயின் மிகவும் ஆபத்தான வகை. இது விரைவாக வளரும் மற்றும் எந்த உறுப்புக்கும் பரவும் திறன் கொண்டது. மெலனோமா மெலனோசைட்டுகள் எனப்படும் தோல் செல்களிலிருந்து வருகிறது. இந்த செல்கள் மெலனின் என்ற கருப்பு நிறத்தை உருவாக்குகின்றன, இது சருமத்திற்கு நிறத்தை அளிக்கிறது.

அன்று போலந்தில் தங்கியிருந்தார். காலை எழுந்த போது ரிச்சர்ட் ஸ்கோலியர்ருக்கு கடுமையான தலைவலியுடன் மெலிதான வலிப்புத் தாக்கமும் இருந்தது. பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது டாக்டர் ஸ்கோலியருக்கு க்ளியோபிளாஸ்டோமா நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இது மூளைப் புற்றுநோயின் தீவிரமான நான்காம் நிலை வடிவம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!