புத்தகக் காட்சி என்பது வெறும் அடுக்கப்பட்ட காகிதங்களின் தொகுப்பு மட்டுமல்ல. அங்கே அறிவுப்பசிக்கு இணையாக வயிற்றுப்பசியும், தத்துவங்களுக்கு இணையாக வாழ்வாதாரப் போராட்டங்களும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு நடக்கின்றன. காற்று குறைவாக இருக்கும் அரங்கத்தை விட்டு வெளியே வந்ததும் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் பலூன்கள் கண்களில் பட்டன.
அவர் பெயர் நிஷா. ஐந்து வருடங்களாக இங்கே பலூன் விற்கிறார். உள்ளே புத்தகங்கள் வாங்கும் பெற்றோர், பிள்ளைகளுக்குப் பலூன் வாங்குவது இங்கே எழுதப்படாத சட்டம். வளர்ந்த பிள்ளைகளும் கூட அவரிடம் பலூன் வாங்கிச் செல்கிறார்கள். வார இறுதிகளில் சராசரியாக 250 பலூன்கள் வரை விற்றுத் தீர்கின்றன.
மகளுக்குத் திருமணமாகித் திருவாரூரில் வசிக்க, பிளஸ்-டூ படிக்கும் மகன் சித்திக் விடுமுறை நாட்களில் இங்கே உதவுகிறான். நிஷா அக்காவுக்கு வாசிப்பில் இஷ்டமில்லை. ஆனால் மகன் உள்ளே சென்று தத்துவம் மற்றும் மேலாண்மை புத்தகங்களை வாங்கிப் படிப்பது ஒரு அழகான முரண்.














Add Comment