சீனாவின் பிறப்பு விகிதம் (Fertility rate) வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. சீனாவின் தேசியப் புள்ளியியல் பணியகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்ற ஆண்டின் பிறப்பு விகித எண்ணிக்கை 79.2 லட்சமாகக் குறைந்துள்ளது. மாறாக, சீனாவின் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு எட்டு என உயர்ந்துள்ளது. பிறப்பு விகிதங்களை அதிகரிக்க, சீனக் குடியரசு ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளது. சீனர்களோ திருமணம் குழந்தை என்றாலே அலறியடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.
1958இல் சீனாவைப் பெரும் பஞ்சம் உலுக்கியது. மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகக் கொடிய பஞ்சமாகக் கருதப்படும் அது மூன்று ஆண்டுகள் நீடித்தது. கிட்டத்தட்ட 45 மில்லியன் மக்கள் உணவின்றிப் பட்டினியால் உயிரிழந்தனர். 1976ஆம் ஆண்டு, சீன மக்கள் தொகை 900 மில்லியனை எட்டியிருந்தது. இதே வேகத்தில் தொடர்ந்தால் மக்கள்தொகை எளிதில் நூறு கோடியைத் தொட்டுவிடும், இன்னொரு பெரும் பஞ்சத்தை நாடு தாங்காது என்று சீன அரசு எண்ணியது.
இதையடுத்து 1980ஆம் ஆண்டு அந்நாடு ஒற்றைக் குழந்தைக் கொள்கையை (One child policy)அறிவித்தது. அதன்படி, நாம் இருவர் நமக்கு ஒருவர் திட்டத்தைக் கட்டாயமாக்கியது. மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதங்களை விதிக்கப்பட்டன. கட்டாயக் கருக்கலைப்புகளும், கருத்தடை அறுவை சிகிச்சைகளும் அமல்படுத்தப்பட்டன. பலர் தங்கள் குழந்தைகளைச் சாலையோரங்களிலும் சந்தைகளிலும் விட்டுச் சென்றனர். அனாதை இல்லங்கள் குழந்தைகளால் நிரம்பி வழிந்தன.










Add Comment