‘இந்த நாட்டில் பிச்சைக்காரர்கள் என்று யாரும் கிடையாது. அப்படி நீங்கள் தெருவில் பார்க்கும் ஒவ்வொருவரும் பொழுதுபோக்கிற்காகப் பிச்சை எடுப்பவர்கள். குப்பைத் தொட்டிகளில் உணவு தேடுபவர்கள், சிக்னலில் கண்ணாடி துடைப்பவர்களை நமது தெருவில் பார்க்க முடியும். இவர்கள் முழு நேரப் பணி செய்ய விருப்பமில்லாமல், சுலபமாகக் காசு சம்பாதிக்கப் பிச்சை எடுக்கத் தீர்மானித்துள்ளனர்’.
இது சினிமா பட வசனம் இல்லை. சென்ற வாரம் கியூபா நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூகநலத் துறை அமைச்சர் மார்தா எலனா ஃபீட்டோ கப்ரேரா என்பவர் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்த செய்திதான் இது.
1950களில் கியூபப் புரட்சியின் மூலம் உலகத்தின் கவனத்தைத் திரும்ப வைத்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. சோவியத் ஒன்றியத்தின் (USSR) ஆதரவுடன் கியூபாவை ஒரு கம்யூனிச நாடாக மாற்றினார். இது உலகம் அறிந்த வரலாறு. அது இன்று பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாக வளர்ந்து விட்டதா என்று ஆச்சரியப்படவேண்டாம்.














Add Comment