ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி. இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கவுள்ளன.
1800களின் மத்தியில் மும்பைக்குத் தொழில் தேடி வந்தவர்களுக்காக ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. தோல் மற்றும் டெக்ஸ்டைல் தொடர்பான பல சிறு, குறு நிறுவனங்கள் செயல்படும் இந்தப் பகுதியில் ஆண்டுக்கு 9000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இந்தப் பகுதி மேலும் விரிவடைந்தது. பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகம். சுமார் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு இரண்டு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் என்கிற எண்ணிக்கையில் மக்கள் நெருக்கமாக வசிக்கின்றனர்.
Add Comment