பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சவுதி அரேபியா என்றாலே எண்ணெய்க் கிணறுகள்,பாலைவனங்கள், மத யாத்திரைகள் இவையெல்லாம்தான் நினைவுக்கு வரும் .ஆனால் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தொடங்கிய ‘விஷன் 2030’ திட்டங்களால் தற்போது உலகின் முக்கிய சுற்றுலாக் குறியீட்டுத் தளமாகவும் மாறியுள்ளது சவுதி.
சவுதி தலைநகர் ரியாத், உலகளாவிய சுற்றுலாவின் புதிய தலைநகராக உருவெடுத்துள்ளது. நவம்பர் 9 முதல் 12 வரை ரியாத் நகரில் ஐநா சபையின் உலகச் சுற்றுலா அமைப்பின் 26ஆவது பொதுக்குழு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் 148 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு வளைகுடா நாடு ஒன்றில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால் சவுதி அரசின் சுற்றுலாத் துறை வரலாற்றில் இது ஒரு மைல் கல். இம்மாநாடு, ஐம்பதாண்டு நிறைவின் வெற்றிக் கொண்டாட்டம் மட்டுமல்ல, அடுத்த ஐம்பதாண்டுத் திட்டங்களுக்கான வெள்ளோட்டமும் கூட.















Add Comment