Home » வைர சூத்திரம் – மின்நூல்
மின்நூல்

வைர சூத்திரம் – மின்நூல்

மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வணக்கம்.

இது நமது நூறாவது இதழ். இத்தருணம் தரும் மகிழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த மின்நூலை உங்களுக்கு வழங்குகிறோம்.

வைர சூத்திரம் என்பது ஜென் தத்துவ உலகில் மிக முக்கியமானதொரு கருவி. மகாயான பவுத்தத்தின் ஓரங்கம். சுய பரிசீலனைக்கும் உயர் ஆன்மிக நிலையை எய்துவதற்கும் இந்தச் சூத்திரத்தை அவர்கள் பயன்படுத்துவார்கள்.

நாம் அந்தச் சொல்லை மட்டும் எடுத்தாண்டிருக்கிறோம். இந்தப் பிரதியும் சுய பரிசீலனைக்குத் தூண்டுவதுதான். ஆனால் ஆன்மிகம் சார்ந்ததல்ல. வாழ்வில் ஒரு நிறைவை, முழுமையை, திருப்தியை எட்டிப் பிடிக்க உதவக் கூடிய நூறு வழிமுறைகளை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

அப்படி என்றால்?

பிறக்கிறோம். இருக்கிறோம். கிளம்பிவிடுகிறோம். சிறிய வாழ்வானாலும் சரி; மிக நீண்ட வாழ்க்கைப் பயணமானாலும் சரி. திரும்பிப் பார்த்தால் வாழ்ந்த வாழ்க்கை திருப்தியளிக்க வேண்டும். அதிருப்திகள், ஏமாற்றம், கசப்பு, விரக்தி உணர்வுதான் மிஞ்சுகிறதென்றால் சரியாக வாழவில்லை என்று பொருள்.

சரியாக வாழ்வதற்கு நூற்றுக் கணக்கான பயிற்சி வகுப்புகள் இன்று வந்துவிட்டன. ஆனால் மகிழ்ச்சிகரமான வாழ்வின் சாரம் என்பது பத்து விஷயங்களில் நாம் செலுத்தும் கவனத்தில்தான் உள்ளது.

1. ஓய்வு
2. உழைப்பு
3. உணவு
4. உறக்கம்
5. மன நலம்
6. உடல் ஆரோக்கியம்
7. உறவுகள்
8. நண்பர்கள்
9. தோல்விகள்
10. வெற்றிகள்

எண்ணிப் பாருங்கள். மொத்த வாழ்வையும் இந்தப் பத்துப் புள்ளிகளுக்குள் அடக்கிவிட முடியும். இந்தப் பத்தையும் சரியாகப் பராமரிக்க முடியுமானால் நாம் சரியாக வாழ்கிறோம் என்று பொருள். திருப்தியாக வாழ்கிறோம் என்று பொருள்.

ஆனால் பத்தையும் சரியாகப் பராமரிப்பது அத்தனை எளிதல்ல. சில எளிய பயிற்சிகள், பழக்க வழக்க மாற்றங்கள், அனைத்துக்கும் மேலாக வாழ்வு ருசிக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பம் அவசியம்.

அதைத்தான் சொல்லித் தருகிறது இந்தச் சிறிய கையேடு.

பத்து வல்லுநர்கள் இந்நூலில் பேசியிருக்கிறார்கள். அவரவர் துறையில் அழுத்தந்திருத்தமாகத் தடம் பதித்த விற்பன்னர்கள்.

வாழ்வின் முழுமையை ருசி பார்க்க ஒவ்வொருவரும் இக்கையேட்டில் பத்து வைர சூத்திரங்களை வழங்கியிருக்கிறார்கள்.

மெட்ராஸ் பேப்பரின் நூறாவது இதழில் இந்த நூறு வாழ்க்கைச் சூத்திரங்களை வாசகர்களுக்குத் தொகுத்தளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ராஜ்ஶ்ரீ செல்வராஜ்

மிகக் குறுகிய காலத்தில் வல்லுநர்களைச் சந்தித்துப் பேசி, புத்தகத்தைச் சிறப்பாக எழுதியிருப்பவர் நமது செய்தியாளர், எழுத்தாளர் ராஜ்ஶ்ரீ செல்வராஜ். ‘வென்ற கதை’ என்கிற இவரது முந்தைய வெற்றி நூல், மெட்ராஸ் பேப்பர் வெளியீடாக – அச்சுப் புத்தகமாக முன்னதாக வெளிவந்திருக்கிறது.

நூலைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இனி அவ்வப்போது இத்தகைய சிறிய, பயனுள்ள புத்தகங்களை நமது வாசகர்களுக்குத் தர நினைத்திருக்கிறோம். வாழ்வின் ருசி என்பது செயல்களின் சிறப்பே அல்லவா?

மிக்க அன்புடன்
ஆசிரியர்

புத்தகத்தைக் கீழே தரப்பட்டுள்ள லிங்க்கில்  தரவிறக்கம் செய்யலாம். கிண்டில் கருவி, கிண்டில் செயலியில் எளிதாகப் படிக்கலாம்.

வருட சந்தா, ஆயுள் சந்தா செலுத்தியவர்களுக்கு மட்டுமே இப்புத்தகம்
[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

உங்கள் எண்ணம்

  • அருமை. நல்ல உழைப்பு. அனைவருக்கும் ஊக்கமும் ஆக்கமும் தரக்கூடியதாக இருக்கும். வாழ்த்துகள்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!