முதலில் நாம் அறிமுகம் செய்து கொள்ளலாம். மன்னியுங்கள்… நாம் என்றா சொன்னேன்..? இல்லையில்லை, நான் என்னை யார் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளப் போவதில்லை. நான் யார் என்பதைச் சொல்லப் போவதில்லை. உங்களிடம் சற்றே எதிர்மறையில் சதிராடிப் புரியவைக்கப் போகிறேன். கட்டுரையின் இறுதியில் நான் சொல்வதற்குள் நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால்… நீங்கள்தான் உஸ்தாத்.
நான் ஓர் அரசு ஊழியன். நல்ல சம்பளம் கிடைக்கிறது எனக்கு. இருந்தாலும் மக்கள் சேவைக்காக உழைக்கும் என் வேலையில் எனக்கு எந்த மனக்குறையும் வந்துவிடக் கூடாதென்று தனி பங்களா, ஆள், தேள், அம்பு, கம்பு அத்தனையும் வழங்கியிருக்கிறது அரசாங்கம்.
யூடியூபர் இர்ஃபானும் நம் பீஹார் தலையும் என நினைக்கிறேன். நல்ல நகைச்சுவை மேடம்.