Home » நகைச்சுவை

Tag - நகைச்சுவை

நகைச்சுவை

வேலை, வெட்டி வேலை

‘முருகா… எனக்கொரு வேலை கொடு முருகா!’ என்று தினமும் வேண்டிக்கொண்டிருந்தான் ஹார்லிக்ஸ் டப்பா. ஒருநாள் அவன் முன்னால் திடீரென்று முருகப்பெருமான் தோன்றினார். ‘நீங்க… உண்மையிலேயே முருகனா?’ ‘ஆமாம்! உனக்கு ஏன் ஹார்லிக்ஸ் டப்பா என்று பெயர் வைத்தனர்?’ ‘எங்க அப்பா...

Read More
நகைச்சுவை

ஓணம் சத்யா: சலனங்களும் சங்கடங்களும்

ஆகஸ்ட் மாதம் தொடங்குவதற்கு முன்பே, தமிழ் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூவென்சர்ஸ் எல்லோரும் தங்கள் வீட்டை கேரளாவுக்கு மாற்றிவிட்டார்களோ என்று சந்தேகம் எனக்கு வரத் தொடங்கியது. அந்த அளவுக்கு அனைவரும் கேரளவாசிகளாகி ஓணம் பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்திருந்தார்கள். இன்ஸ்டாகிராமைத் திறந்தால் போதும். எங்கும் ஓணம்...

Read More
நகைச்சுவை

இலை யாத்திரை

சாதாரணமான ஒரு நாளைச் சாகசங்கள் நிறைந்த நாளாக மாற்றும் வல்லமை என் இளைய மகளின் சில அறிவிப்புகளுக்கு உண்டு. அப்படித்தான் சென்ற வார வியாழக்கிழமை மாலை, ‘அம்மா, ஞாயிற்றுக்கிழமை ஆறுவிதமான இலைகளைக் கொண்டு வரணும்னு டீச்சர் சொல்லி இருக்காங்க’ என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டாள். அதோடு என் வாரயிறுதி...

Read More
நகைச்சுவை

நைட்டி குற்றப்பிரிவும் லுங்கி உளவுத்துறையும்

‘ஹாரி பாட்டர் அண்ட் தி காப்லெட் ஆஃப் ஃபயர்’ புத்தகத்தில் ஒரு காட்சி வரும். நான் புத்தகம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். திரைப்படத்தை அல்ல. கட்டுரையைப் படித்துவிட்டு அந்தக் காட்சியைத் திரைப்படத்தில் தேடாதீர்கள். கிடைக்காது. ஒரு நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கென்று ஒரு ஃபார்முலா இருக்கிறது...

Read More
நகைச்சுவை

மகா வித்தையும் மறைந்திருந்த மர்மமும்

நோபல் பரிசும் ஆஸ்கர் பரிசும் வாங்கும் அளவுக்கு என்னிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடந்தாலும், என் பயணங்களுக்கு மிகவும் அவசியமான அந்த ஒரு ‘மகா வித்தை’ மட்டும் என்னிடம் இல்லையே என்ற கவலை ஒருநாள் வந்தது. அப்படியே கவலைப்பட்டுக்கொண்டு சும்மா இருப்பது என் ரேஞ்சுக்கு அழகல்ல என்று முடிவு...

Read More
நகைச்சுவை

ஓமானில் ஓர் உப்பு யாத்திரை

நாங்கள் அபுதாபியிலிருந்து ஓமானுக்குக் குடிபெயர வேண்டும் என்ற நிலை வந்தபோது, எங்களுடைய பொருட்களை நாடு கடத்துவதற்குச் சிறப்பான திட்டங்கள் பலவற்றை வகுத்தேன். ஒரு ராணுவ நடவடிக்கையின் துல்லியத்துடன் அபுதாபியிலிருந்து ஓமானுக்கு எங்கள் குடிபெயர்வைத் திட்டமிட்டேன். ‘திட்டமிடல் திலகம்’ என்று...

Read More
நகைச்சுவை

ஆறு அரிய திறன்களைக் கொண்ட அடுத்த வருடக் கோடீஸ்வரி

‘என்னத்த பெருசா படிச்சுக் கிழிக்கப் போறீங்க நீங்களெல்லாம்… படிப்பை விட திறமைதான் முக்கியம். அது இருக்கான்னு பாருங்க!’ எங்கள் தெருவில் வசித்து வந்த ஒரு பாட்டி, பள்ளிக்கூடத்துக்குப் போகும் பிள்ளைகளைப் பார்க்கும் போதெல்லாம் இப்படிச் சொல்வது வழக்கம். ‘பாவம்… அவளுக்குப்...

Read More
நகைச்சுவை

சிங்கப் பெண்ணா, பெண் சிங்கமா? (படுபயங்கர ஆராய்ச்சிக் கட்டுரை)

‘பெண்களுக்காகச் சிங்கப் பெண் சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது’ என்னும் இந்த வாரப் பரபரப்புச் செய்தியைப் பார்த்தபோது எனக்குள், ‘பெண்களை ஏன் சிங்கத்தோடு ஒப்பிடுகிறார்கள்?’ என்ற அறிவார்ந்த கேள்வி எழுந்தது. அந்தக் கேள்வியோடு சில கிளைக் கேள்விகளும் வரிசையாக வந்தன. இந்த...

Read More
நகைச்சுவை

போர்! ஆமாம் போர்!

சூடான எண்ணெய்யில் ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டால் சட்டென்று சமையலறை முழுக்க ஒரு கார நெடி பரவுமே, அதை விடவும் வேகமாக அந்தச் செய்தி பரபரப்பாகப் பரவியது. ‘இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை!’ சில நிமிடங்களில் அந்தச் செய்தியின் பின்னணி இசை போல இன்னொரு செய்தி வந்தது...

Read More
நகைச்சுவை

குட்டிச் சாத்தான் கூட்டாளி

என் சக எழுத்தாளக் கூட்டாளிகள் அனைவரிடமும் அவர்கள் சொன்னபடி கேட்கும் ஒரு ஜின் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஜின் என்பது நாம் சொன்னபடி கேட்டு, நம்மை மேன்மை அடையச் செய்யும் ஒரு நல்ல குட்டிச்சாத்தான் என்று பேசிக்கொண்டார்கள். அது ஒரு வதந்தி என்று புரியாமல் அதில் மாட்டிக் கொண்டவர்களுள் நானும் ஒருத்தி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!