Home » இறந்து போன இறுதி நம்பிக்கை
உலகம்

இறந்து போன இறுதி நம்பிக்கை

இஸ்லாம் கடாஃபி

கடந்த மூன்றாம் தேதியன்று, லிபிய சர்வாதிகாரி மும்மர் கடாஃபியுடைய மகன், சைஃப்-அல்-இஸ்லாம் கடாஃபி கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய நெருங்கிய வட்டாரமும் உள்ளூர் ஊடகங்களும் இதனை உறுதிசெய்தன. சைஃப்-அல்-இஸ்லாமுடைய மறைவால் அரசியல் ரீதியாக கடாஃபி மரபு முடிவுக்கு வந்துள்ளது.

1969ஆம் ஆண்டில் மும்மர் கடாஃபி ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரையிலான லிபிய வரலாற்றை மூன்று முக்கியமான பகுதிகளாகப் பிரிக்கலாம். கடாஃபியுடைய ஆட்சிக்காலமான சுமார் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் அதில் முதல் பகுதி.

லிபியாவின் எண்ணெய் வளத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டார் மும்மர் கடாஃபி. அவரது ஆட்சிக்காலத்தில் கல்வியும் மருத்துவச்சேவைகளும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. மிகப் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மனிதர்களால் வெட்டப்பட்ட மகா ஆறு (The Great Man-made River) அதற்கொரு சான்று. மொத்தத்தில் மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்புநோக்கும்போது, லிபிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டதாக இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!