Home » திருமணம்: ஜென் ஸீக்களின் தேர்வு என்ன?
சமூகம்

திருமணம்: ஜென் ஸீக்களின் தேர்வு என்ன?

இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்தியாவில், குறிப்பாக இந்தியா டிஜிட்டல்மயமான பிறகு, பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. ஆனால், இப்போதெல்லாம் இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் திருமணத் தகவல் மையங்களை நாடுவது அதிகரித்துள்ளது. ஜென் ஸீ தலைமுறையினரின் வருகையும் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கின்றன திருமணத் தகவல் மையங்கள்.

நம்முடைய புராணங்களும் இலக்கியங்களும் காதலைச் சிறப்பித்துக் கவிபாடியிருக்கின்றன. என்றாலும், நம் முன்னோர்களுள் ரசிகமணிகளாகத் திகழ்ந்தவர்கள்கூட அவை ஏடுகளிலேயே பத்திரமாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டனர். துஷ்யந்தன்-சகுந்தலை, அம்பிகாபதி-அமராவதி கதைகளைக் கேட்டு மூக்கைச் சிந்திய பெருந்தகைகளும், நடைமுறை வாழ்க்கை என்று வரும்போது காதல் என்றால் தங்கள் பிள்ளைகளிடம் களேபரம் செய்பவர்களாகவே இருந்தார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது பல ஆதாயக் கணக்குகளோடு பிணைந்திருக்கும் பெருநிகழ்வு. அந்தக் கணக்குகள் வகை நுண்கணிதம், தொகை நுண்கணிதங்களைவிட நுணுக்கமானவை. பல நூற்றாண்டுகளாகப் பெரியோர் வரைந்த சமன்பாடுகளின்படிதான் மணங்கள் நிகழ்ந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Natarajan Panchanatham says:

    இன்றைய தலைமுறை Arranged marriage என்ற பதத்தை Arranged introduction அப்கிரேடு செய்துள்ளது.” என்பது முற்றிலும் உண்மை.
    இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்கள்தான் பெற்றோர்களிடம் வலியுறுத்துகிறார்கள் என்பதை பல இடங்களில் பார்க்கிறோம். இனி இப்படித்தான்.
    நன்றி.

    பாபநாசம் நடராஜன்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!