Home » முதிர்ந்து மிகுந்தவர்கள்
சமூகம்

முதிர்ந்து மிகுந்தவர்கள்

தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில், 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் 10.6% இருந்த முதியோர் எண்ணிக்கை, 2031ஆம் ஆண்டுக்குள் 18.2% ஆக அதிகரிக்கும்; இது எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 71.7% வளர்ச்சி என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேசிய அளவில் முதியோர் எண்ணிக்கையின் சராசரி வளர்ச்சி 56% ஆக இருக்கும் நிலையிலும், மகாராஷ்டிரா (50%), கர்நாடகா (56.3%) போன்ற மாநிலங்களில் அறுபது சதவீதத்தைத் தாண்டாத நிலையிலும், தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தமிழகம், கேரளா தவிர்த்து இமாச்சலப் பிரதேச மாநிலத்திலும் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளது. கேரளாவில் 2011இல் 13% ஆக இருந்த முதியோர் எண்ணிக்கை, 2036ஆம் ஆண்டுக்குள் 23% ஆக உயரும். உத்தரப் பிரதேசத்தில் மிகக் குறைவாக 12 % மட்டுமே முதியோர் இருப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும் உழைக்கும் வயதுடைய பிரிவினர் (15-59 வயது) 2021ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் ஏறக்குறைய 66.4% பேர். இவர்கள் 2036ஆம் ஆண்டில் 63.6% ஆகக் குறைவார்கள். இதனால் தமிழக அரசு எதிர்காலத்தில் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை அதிகப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் நெருக்கடியும் அதிகரிக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!