Home » குஜராத் புல்டோசர்
இந்தியா

குஜராத் புல்டோசர்

ஒரு மாநிலத்தில் தொடர்ந்து ஏழுமுறை தேர்தலில் வென்று ஆட்சியில் இருப்பது சாதாரண விஷயமல்ல. பாரதிய ஜனதா கட்சி அதனைச் செய்து காட்டியிருக்கும் இடம் குஜராத்.

குஜராத் மாடல் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு வளர்ச்சி எனப் பெயரிட்டுச் சீவி சிங்காரித்து அழகாக்கித் தேர்தலின்போது மக்களுக்காகக் காட்சிக்கு வைத்தது வலதுசாரி அரசியல். இப்படித் திட்டமிட்டு ஒரு கருத்துருவாக்கம் வலுப்பெற்ற பிறகு மோடி இந்தியாவின் அதிகாரம் மிக்க பதவியில் அமர்வதை நூற்றாண்டு கண்ட காங்கிரசாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. குஜராத்தின் முதல்வராக இருந்தபோது கட்டமைக்கப்பட்ட மோடியின் பிம்பம் அவரை மூன்றாவது முறையாகவும் இந்தியப் பிரதமராக ஆட்சியில் அமரவைத்தது. ஒவ்வொரு செங்கல்லாக வைத்து சங்பரிவார அமைப்புகள் எழுப்பியது அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பதற்கும் சேர்த்துத்தான் என்பது மக்களுக்குப் புரிய சில காலம் ஆனது. ஆனால் திட்டமிட்டபடி அது நடந்தேறிவிட்டது.

இப்படி உருவாக்கப்பட்ட குஜராத் மாடல் அரசியலில் கடந்த சில ஆண்டுகளில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் குஜராத் மாடல் என்பதற்குப் பதிலாக புல்டோசர் மாடல் கோஷங்கள் சற்று தூக்கலாகவே ஒலித்தன. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வளர்த்துவிடும் சங்க்பரிவார அமைப்புகளின் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகவும் இது கவனிக்கப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!