‘நான் மண்டியிட்டு இறைவனிடம் வேண்டிக்கொண்டே இருக்கிறேன்.’ மெலிசா சூறாவளி (Hurricane Melissa) தாக்கும் ஒரு நாள் முன்பு, ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் கையறுநிலையில் பேசியது இது.
‘ஒட்டுமொத்த ஜமைக்காவுமே உண்மையில் உடைந்து போய் உள்ளது.’ மெலிசா கரை கடந்த பின், அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் சொன்னது இது.
மெலிசா என்று மென்மையான பெயர் கொடுக்கப்பட்ட சூறாவளியின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்துள்ளது ஜமைக்கா. இப்படியொரு பேரழிவை ஜமைக்கா இதுவரை கண்டதில்லை. காரணம், இப்படியொரு சூறாவளியையும் அந்நாடு இதுவரை கண்டதில்லை. அக்டோபர் 28 அன்று, மணிக்கு 295 கிலோமீட்டர் அதிகபட்ச வேகத்தில் ஜமைக்காவைத் தாக்கியது மெலிசா.















Add Comment