விவசாயம் என்றால் மண்ணை உழுது, தேவையான விதைகளை விதைத்து, பயிர் வளர்ந்த பின் அறுவடை செய்வது என்பதே.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சியோடு, விவசாய முறைகளும் வளர்ச்சியடைந்தன. உழுவதற்கும் சாகுபடி செய்வதற்குமான இயந்திரங்கள், உரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், பூச்சிக்கொல்லிகள் போன்றவை பயிர் சாகுபடியில் உள்ள திறனைக் கூட்டின. ஆனாலும் அப்பப்போ மழை தேவையான நேரத்தில் பெய்யாததாலோ அல்லது தேவைக்கதிகமாக மழை பெய்து வெள்ளம் வருவதாலோ பாதிப்புகள் ஏற்படும். அதாவது என்னதான் விவசாயத் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இயற்கையை நம்பியே விவசாயம் உள்ளது.
இயற்கையை நம்பாமல் நமது கட்டுப்பாட்டுக்குள் விவசாயம் வருவதற்கான தொழில் நுட்பம் தற்போது வளர்ந்து வருகிறது. இந்தப் புதிய விவசாயத் தொழில் நுட்பத்தை ஆங்கிலத்தில் Vertical Farming எனச் சொல்வார்கள். நேரடி மொழிபெயர்ப்பாக எடுத்தால் செங்குத்தாகச் செய்யப்படும் விவசாயம் எனும் பொருள் வரும். ஆனாலும் இந்த விவசாய முறை குறிப்பது என்னவென்றால் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலைக் கொண்ட இடத்தில் மண்ணின் தேவையின்றிச் செய்யப்படும் விவசாயம். அதாவது கிரீன் ஹவுஸ் போன்ற ஒரு பிரத்தியேகக் கட்டடத்தில் பயிர்களை வளர்ப்பதற்கான விவசாய முறை.
Add Comment