Home » திரும்பிப் பார், இது இரும்பு நிலம்!
தமிழ்நாடு

திரும்பிப் பார், இது இரும்பு நிலம்!

திச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புத் தொல்பொருள்கள்

தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சான்றுகள் வெளியாகியிருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புத் தொல்பொருள்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாகத் தொல்லியல் துறை அறிவித்திருக்கிறது.

தொல்காப்பியம், புறநானூறு, நற்றிணை, திருக்குறள் எனத் தமிழின் புராதன நூல்களிலேயே இரும்பின் பயன்பாடு பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஆய்வுக்குள் உட்படுத்தாத ஏட்டுப் பெருமைகளாகவே இருந்தன. அதைத் தாண்டி தமிழகத்தில் முறையான இரும்பின் ஆய்வு தொடங்கியது மாங்காட்டு வாள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான்.

சேலம் மாவட்டம் மாங்காடு என்ற இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் இரும்பு வாள் ஒன்று கிடைத்தது. இந்த வாளை காலக் கணக்கீட்டுக்கு உட்படுத்தியபோது, அதன் காலம் கி.மு. ஆயிரத்து அறுநூறுகளிலிருந்து, ஆயிரத்து நானூறுக்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று தெரியவந்தது. இதுதான் ஆரம்பம். இதைத் தொடர்ந்து இரும்பின் மீதான ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. ஆய்வின்படி அதில் கிடைத்த இரும்பின் காலம் தோராயமாக கி.மு. பதினேழாம் நூற்றாண்டாக இருக்கலாம் எனத் தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆக இருந்தது. இப்படி படிப்படியாக இரும்பின் காலம் முன்னோக்கிச் சென்று கொண்டே இருந்தது, இதைத் தொடர்ந்து, அகழாய்வை மிகவும் தீவிரப்படுத்தி தொல்லியலின் மிக முக்கியமான பிரிவாக இரும்பின் மீதான ஆய்வு மாறியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!