பாலஸ்தீன் ஸ்டேட் என்கிற தீர்வை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவ்வப்போது சொல்லி வருகின்றன. இஸ்ரேல் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது. சமீபத்தில் பைடன், ஏதோவொரு விதத்தில் பாலஸ்தீன் ஸ்டேட் அமைவதை நெதன்யாகு ஒப்புக்கொள்வார் என்று நம்புவதாகத் தெரிவித்தார். ஷபாத் நாளாக இருந்தாலும் பரவாயில்லை என்று அப்படியெல்லாம் ஒப்புக்கொள்ளவே மாட்டோம் என உடனடியாக அறிக்கை வெளியிட்டார் நெதன்யாகு.
இறந்தவர்களைக் கூடத் தோண்டி எடுக்கும் இஸ்ரேல் வாழ்வதற்கு வழி சொல்லப் போவதில்லை என்கிறார்கள் காஸா மக்கள். காஸாவில் புதைக்கப்பட்ட பிணங்களை புல்டோசர் கொண்டு தோண்டி எடுத்து, கல்லறைகளைச் சிதைத்துள்ளது இஸ்ரேல். 16 கல்லறைகள் நாசம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது சிஎன்என் ஆய்வு.
Add Comment