Home » அமெரிக்கத் தேர்தல்: துணைவர் ஜாதகம்
உலகம்

அமெரிக்கத் தேர்தல்: துணைவர் ஜாதகம்

டிரம்ப் -ஜே.டி.வான்ஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல் சமாளித்துக்கொண்டிருக்கிறார். பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு, காதில் காயம், சுட்டவன் சொந்தக் கட்சிக்காரனே என்கிற விவரம் என்று அந்தப் பக்கம் ஆட்டம் களை கட்டிக்கொண்டிருக்கிறது.

மறுபுறம் ஜோ பைடனை முதுமை ஆட்டிப்படைக்கிறது, வியாதிகள் படுத்தி எடுக்கிறது, தான் என்ன பேசுகிறோம் என்பதுகூட அவருக்குத் தெரிவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள்.

அதெல்லாம் இல்லை, நான் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று கடந்தவாரம் வரை சொல்லிக்கொண்டிருந்தவர், திடீரென்று தேர்தலில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று அறிவித்திருக்கிறார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் தனது தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக்க ஆதரவும் தெரிவித்திருக்கிறார்.

அதிபர் ஆதரவு வெல்லுமா, கட்சி ஆதரவு இருக்குமா, அனைத்துக்கும் மேலாகக் கமலாவை அமெரிக்கர்கள் விரும்பி ஏற்பார்களா என்பதெல்லாம் இனி வரும் நாள்களுக்கான அவல். ஒருவேளை கமலா அதிபர் வேட்பாளரானால் அடுத்த துணை அதிபர் வேட்பாளர் யார் என்றொரு கேள்வி வரும். இன்னொரு நபர் முன்னிறுத்தப்படுவார். பிறகு அவரைச் சுற்றி ஆயிரம் வலைகள், பல்லாயிரம் கதைகள் எழும்.

எல்லாம் இருப்பதுதான். எப்போதும் நடப்பதுதான். அதில்லை விஷயம். ஓர் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கத்தான் ஆயிரத்தெட்டு நடைமுறைகள், கணக்கு வழக்கில்லாத கண்டிஷன் அப்ளைகள். அவர் நாடெங்கும் சுற்ற வேண்டும். தொண்டைத் தண்ணீர் வற்ற சொற்பொழிவாற்ற வேண்டும். தொண்டர்களைத் தூண்டிப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மக்களைக் கவர வேண்டும். சந்தடி சாக்கில் வந்து சேரும் வம்பு வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால் துணை அதிபர் வேட்பாளர்களுக்கு இந்தச் சங்கடமெல்லாம் இல்லை. அதிபர் வேட்பாளரின் உள்ளம் கவர்ந்தால் போதும். சரியாகச் சொல்வதென்றால் வீதியில் திரிகிற யாருக்கு வேண்டுமானாலும் யானை மாலை போட்டு ராஜாவாக்கிவிடுவதைப் போல. அது ஓர் அதிகாரபூர்வ லாட்டரிதான். சந்தேகமேயில்லை.

அப்படித்தான் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப், யாரைத் தேர்ந்தெடுப்பார், மார்க் ரூபியோவையா, விவேக்ராமசாமியையா, நிக்கியையா என பார்த்துக்கொண்டிருந்த போது, அவர் மகனின் நண்பரான செனட்டேர் வான்ஸின்(JDVance) கழுத்தில் விழுந்திருக்கிறது அதிர்ஷ்டப் பூமாலை!

ஓஹையோவைச் சேர்ந்த செனேட்டர் ஜே.டி.வான்ஸை அவரது துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பதில், டோனால்ட் ட்ரம்ப் அவரது கடுமையான வலதுசாரித் திட்ட நிரலை வலுப்படுத்தும் குறிக்கோள் ஒன்றுடனே செயல்பட்டிருக்கிறார். ஏழைமை நிறைந்த குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பால் முன்னேறிய தன் வாழ்க்கையை முன்பே “ஹில்பில்லி எலிஜி” (Hillbilly Elegy) என்ற புத்தகத்தில் எழுதிப் பலரின் மனத்தில் இடம் பெற்றிருக்கிறார் வான்ஸ்..

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!