Home » கிச்சன் கேபினட் – புதிய பகுதி
பெண்கள்

கிச்சன் கேபினட் – புதிய பகுதி

இப்படம் செய்யறிவு உருவாக்கம்.

அமெரிக்காவின் முதல் பெண்மணிகள் – உண்மைக் கதைகள்

முக்கியமான விருந்தினர்களை வரவேற்க மிகுந்த பிரயத்தனம் செய்து, கடைசியில் அது வேறொன்றாய் முடிந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். அந்த விருந்தினரைத் திரும்பி வரவழைத்து மகிழ்விக்க வேண்டும் எனில் என்னவெல்லாம் செய்யவேண்டும்? அதுதான் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் நேர்ந்தது.

விருந்தினர் சாதாரணமானவர் அல்லர். உலகத் தலைவர் நெல்சன் மண்டேலா. ஜார்ஜ் புஷ் அரசாங்கம் இருந்தபோது நெல்சன் மண்டேலா சங்கடத்துடன் வாஷிங்டன் வந்து சென்றதை மறக்க நினைத்தார். அதற்குக் காரணம், மண்டேலாவை வரவேற்ற கையோடு தென்னாப்பிரிக்க அதிபர் கிளார்க்கையும் புஷ் வரவேற்றதும், பேசியதும்தான். 1994இல் பில் கிளிண்டன் அரசாங்கத்தின் போது மண்டேலா அன்போடு வரவேற்கப்பட்டார். அந்த வரவேற்பு பல காலம் கழித்தும் ஹிலரியுடன் அவர் நல்ல நட்பு பேணக் காரணமாக இருந்தது. இந்த வேறுபாட்டிற்கான காரணம் ஹிலரியின் விருந்தோம்பல் கலை.

புஷ் ஆட்சியில் 1990 ஜூன் 24ஆம் தேதி நியூயார்க் நகரில் ஜெட் விமானத்தில் இருந்து இறங்கிய மண்டெலாவை வரவேற்க 10 பேர் மட்டும் வந்திருந்தனர். வெள்ளை மாளிகையில் நடந்த வரவேற்பு குழப்பமாக மாறியது. அரசாங்க ஊழியர்கள் மண்டேலாவுடன் பேச ஆர்வமிகுதியில் கூச்சலிட்டனர். முதல் பெண்மணி பார்பரா புஷ் அவசரத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் கை மீறியது. பிறகு 20,000 பேர் ஃப்ரீடம் பிளாசாவில் காத்திருந்த போதிலும் மண்டெலாவின் மோட்டார்கேட் நிற்காமல் சென்றது. 40 செனட்டர்கள் மட்டுமே அவரது காங்கிரஸ் உரையைக் கேட்க வந்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!