இந்துக்கள் கார்த்திகை மாதம் ஐயப்பக் கடவுளுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வது போல கிறிஸ்தவர்கள் மேரி மாதாவுக்கு மாலை அணிந்து விரதமிருந்து ஏப்ரல் மாதத்தில் குருசு மலை செல்கிறார்கள்.
தமிழர்கள் குரூஸ் மலை என்று சொல்லும் குருசு மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலையாட்டூரில் உள்ளது. நிலம், மலை மற்றும் நதி ஆகியவை சந்திக்கும் இடத்தில அமைந்திருக்கிறது மலையாட்டூர். குருசு என்ற சொல்லுக்கு மலையாளத்தில் சிலுவை என்று பொருள். காலடியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது குருசு மலை. சபரிமலையிலிருந்து முக்கியச் சாலை வழியே நூற்றைம்பது கிலோமீட்டர்கள் தொலைவிலும் கடினமான குறுக்கு வழிப் பாதையில் முப்பது கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது.
இங்கு ஆலயம் அமைந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள். ஒன்று பக்திப்பூர்வமானது. இன்னொன்று வரலாற்றுத் தொடர்புள்ளது.
இயேசு சிலுவையைச் சுமந்து கல்காரி மலையேறும்போது அனுபவித்த சிரமங்களை அவருடைய பக்தர்களும் உணர வேண்டும் என்பதற்காக நெட்டுக்குத்தலான மலையில் இவ்வாலயம் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
Add Comment