“உங்க கம்ப்யூட்டர்ல வைரஸ் இருக்கா?” என்று யாராவது உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்.? “தெரியலயேப்பா…” என்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பாணியில் சொல்லிவிடுவது தான் உசிதம்.
பொதுவாக நாம் வைரஸ் என்றொரு வார்த்தையைப் பயன்படுத்தி விடுகிறோம். ஆனால் வைரஸ் என்பது மால்வேர் குடும்பத்தின் ஒரு உறுப்பினர் மட்டுமே. மால்வேர் குடும்பம் மிகவும் பெரியது. இக்குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் வேறுவேறு ரகம்.
மால்வேர் என்பது மெலிசியஸ் சாப்ட்வேர் என்பதன் சுருக்கம். அதாவது கெட்டெண்ணம் கொண்ட சாப்ட்வேர். வில்லன் சாப்ட்வேர். அழையா விருந்தாளி. உங்களுடைய கம்ப்யூட்டரிலேயே வாழ்ந்து கொண்டு உங்களுக்கே துரோகம் செய்யும் சாப்ட்வேர். நன்றி நயா பைசா அளவேனும் இல்லாதவை.
“மால்வேர் பத்தியெல்லாம் நான் ஏன்ப்பா தெரிஞ்சுக்கனும்?” என்று கேட்டால், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் கூறுவேன். நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிக்கல் குறித்து அறியாதிருப்பது பெரிய சிக்கலாகும். நிச்சயம் அது முட்டுச்சந்துக்கே இட்டுச்செல்லும்.
மால்வேர் குடும்பத்தின் அங்கத்தினர் அனைவருமே நெகட்டிவ் கேரக்டர்கள் தான். ஒவ்வொருவரைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
how to keep the system updated sir. at the office, there would be people to maintain and keep an eye. what about the homefront?