Home » மணிப்பூர்: மயானமாகிக்கொண்டிருக்கும் மாநிலம்
இந்தியா

மணிப்பூர்: மயானமாகிக்கொண்டிருக்கும் மாநிலம்

ஒரு பெண். பெண்ணா, சிறுமியா என்று சரியாகத் தெரியவில்லை. அவளை நடுச் சாலையில ஒரு கும்பல் சூழ்ந்துகொள்கிறது. கும்பலில் ஒன்றிரண்டு பெண்களும் இருக்கிறார்கள். சிலர் ராணுவச் சீருடை அணிந்திருக்கிறார்கள். மாட்டிக்கொண்ட பெண்ணிடம் மாற்றி மாற்றி அவர்கள் ஏதோ கேட்கிறார்கள். மிரட்டுகிறார்கள். எட்டி உதைக்கிறார்கள். துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்குகிறார்கள். சாலையில் வாகனங்கள் செல்கின்றன. யாரும் இக்காட்சியைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. கவனியுங்கள். நடுச் சாலை. பட்டப்பகல்.

ஒரு கட்டத்தில் தாக்குதல் எல்லை மீறுகிறது. கும்பலில் உள்ள அத்தனை பேரும் ஆளுக்கொரு பக்கம் ஓடி வந்து அந்தப் பெண்ணை எட்டி எட்டி உதைக்கிறார்கள். சாலையில் அவள் சுருண்டு சுருண்டு விழுகிறாள். எழுப்பி அமர வைத்துத் துப்பாக்கியின் பின்புறத்தால் அடித்து மீண்டும் ஏதோ கேட்கிறார்கள். அவள் அழுதுகொண்டே இருக்கிறாள். அழுபவளின் தலைமுடியை இழுத்து உலுக்கி கும்பலில் உள்ள ஒரு பெண் முழங்காலால் இடிக்கிறாள்.

பிறகு அவளை மண்டியிட வைக்கிறார்கள். கண்ணைக் கட்டுகிறார்கள். இப்போதும் சாலையில் வாகனங்கள் செல்கின்றன. யாரும் இக்காட்சியைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. நடுச் சாலையில் இது நடப்பதால், சம்பவத்துக்கு பாதிப்பில்லாமல் வாகனங்கள் ஓரமாகவே செல்கின்றன.

மண்டியிட்ட பெண்ணிடம் மீண்டும் ஏதோ கேட்கிறார்கள். அவள் அழக்கூட சக்தியற்று சுருண்டு விழப் போக, ஆத்திரம் முற்றிய நிலையில் மீண்டும் பாய்ந்து வந்து அவளை எட்டி உதைக்கிறார்கள். விழுபவளை எழுப்பி மீண்டும் மண்டியிட வைத்து, அதன் பிறகு குறி பார்த்துச் சுடுகிறார்கள்.

அவள் இறந்து விழுகிறாள். அப்படியும் கும்பலுக்கு ஆத்திரம் தணிவதில்லை. இறந்து விழுந்தவளை நெருங்கி படபடபடவென மேலும் நாலைந்து குண்டுகளைப் பாய்ச்சிய பிறகுதான் நகர்கிறது அப்பொறுக்கிக் கூட்டம்.

மேற்கண்ட காட்சி முறைப்படி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு தேசமெங்கும் அனுப்பப்படுகிறது. கவனமாக கும்பல் நபர்களின் முகங்களைப் படமெடுக்காமல், தாக்கப்படும் பெண்ணை மட்டும் ஃபோக்கஸ் செய்திருக்கிறார்கள்.

சம்பவம் நடந்தது மணிப்பூரில். ஆதிவாசிகளின் மொழி தெரியுமானால் தாக்குபவர்கள் எந்த இனக்குழு, தாக்கப்பட்ட பெண் எந்த இனக்குழு என்பது புரியும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!