விவாகரத்தான பெண்களைத் தலைமேல் வைத்துக் கூத்தாட ஒரு நாடு உள்ளது. வட மேற்கு ஆப்ரிக்காவில் இருக்கும் மொரிட்டானியா! இங்கே விவாகரத்தான பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக ஒரு சந்தை இருக்கிறது. அதற்குப் பெயரே டிவோர்ஸ் வுமென் மார்க்கெட்.
சஹாரா பலைவனத்தின் மடியில் மொரிட்டானியா உள்ளது. தொண்ணூறு சதவீதம் பாலைவனம். வெந்து தணியும் நாட்டில் பொருளாதாரமும் வளர்ச்சியும்கூடக் காய்ந்து போய்த்தான் உள்ளன.
ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளைப் போல இங்கும் பஞ்சம், பட்டினி, கொள்ளை என்று எல்லாம் உண்டு. கஷ்ட ஜீவனம்தான். 1961ஆம் ஆண்டு பிரான்சிடமிருந்து விடுதலை பெற்ற நாடு, இப்போதும் அப்படியே இருக்கிறது. இஸ்லாத்தைச் சேர்ந்தவர்களான இம்மக்கள், அரபியை தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள். அரபி மொழியில் படிப்பது எழுதுவதில் மட்டுமல்ல, கவிதை எழுதுவதிலும் கெட்டிகாரர்கள்.
Add Comment