Home » மிசோரம்: இன்று 95; நாளை 100!
கல்வி

மிசோரம்: இன்று 95; நாளை 100!

மிசோரம்: கல்வியில் நம்பர் ஒன்

இந்தியாவின் முழுமையான கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக மிசோரம் மாறியுள்ளது. ஒரு மாநிலம் குறைந்தபட்சம் 95% கல்வியறிவு விகிதத்தை அடைந்தவுடன் முழுமையான கல்வியறிவு பெற்றதாக அறிவிக்கப்படும். 2023-2024 காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி (PLFS), தற்போது மிசோரத்தின் கல்வியறிவு 98.2% ஆக உள்ளது. இங்கு கல்வியறிவு என்பது, ஏழு வயதுக்கு மேல் உள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட மொழியில் புரிதலுடன் படிக்கவும் எழுதவும் திறன்பெற்றவராக இருப்பதாகும்.

கல்வியறிவானது வருமானத்திற்கான ஒரு பணியைச் செய்வதற்கு மட்டுமல்லாமல், தனிமனித உரிமைகளை அறிந்து காப்பதற்கும், சமுதாயமாகக் கூடி வாழ்வதற்கும், தன் உடல் குறித்த தகவல்களைப் படித்து கவனம் செலுத்துவதற்கும் தேவைப்படுகிறது. உலகமயமாக்கலின் தாக்கத்தால், உலக அரங்கில் ஒரு தேசம் ஏற்றம் பெற மக்களின் கல்வி அவசியமாகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) 4.1% கல்விக்காகச் செலவிடப்படுகிறது. சில மாநிலங்கள் இத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. அங்கு கல்வியறிவு விகிதம் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. மிசோரம் அவற்றில் ஒன்றாகும்.

சுதந்திரத்திற்குப் பிறகு, அசாமின் ஒரு மாவட்டமாக இருந்த மிசோரம், கிளர்ச்சிக் குழுக்களால் பாதிக்கப்பட்டு, மிகவும் பின்தங்கிய பகுதியாகக் கருதப்பட்டது. இந்திய அரசு 1971ஆம் ஆண்டில் இந்த பிராந்தியத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. பின்பு 1987 பிப்ரவரி 20 அன்று இந்தியாவின் 23வது மாநிலமாக உருவானது. மொத்தம் 2.1 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், தோராயமாக 1.21 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மாநில மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம் பேர் விவசாயத்தைச் சார்ந்துள்ளனர். 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மிசோரம் 11 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இதன் மொத்த நகர்ப்புற மக்கள் தொகை தோராயமாக 0.63 மில்லியன் மற்றும் கிராமப்புற மக்கள் தொகை 0.58 மில்லியன் ஆகும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!