சட்டம் ஒழுங்கு சரியில்லை.
இது எல்லா ஆட்சிக் காலங்களிலும் எல்லா எதிர்க்கட்சியினராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. முற்றிலும் இல்லாவிடினும் பகுதியளவேனும் அது உண்மையாகவே இருக்கும் என்பதால் குற்றம் சாட்டப்படும் ஆட்சியாளர்கள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள்.
குற்றச்சாட்டுக்கு வலு ஏறும் விதத்தில் அசம்பாவிதங்கள் அடுத்தடுத்து நடந்துவிடுமானால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்வார்கள். இது காலகாலமாக இருந்து வரும் வழக்கம்.
மே மாதம் 2021 ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் ஒரு வருடம் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னைகள் எழவில்லை. எதிர்க்கட்சிகளே வாயடைத்துப் போகும் விதத்தில்தான் மாநிலம் அமைதி காத்தது. ஆனால் மெல்ல மெல்ல நிலைமை மாறத் தொடங்கி, இன்று நாளிதழ்களைத் திறந்தாலே எங்காவது ஒரு கொலை, எங்காவது ஒரு கடத்தல், எம்மூலையிலாவது ஒரு லாக்கப் மரணம், யார் இடத்திலாவது ரெய்டு, போதைக் கடத்தல், கள்ளச் சாராய மரணம் போன்ற செய்திகள் ஆக்கிரமித்திருப்பதைக் காண முடிகிறது. சமீபத்திய உதாரணம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமாரின் மரணம்.













இடித்துரைத்திருக்கிறது இவ்வார நம் குரல். ஆனால் ஆட்சியாளர்கள்
குறிப்பாக முதல்வர் கவனத்திற்கு இது சென்றடையுமா ?
காவல் துறையில் பணிபுரிவோர் மீது துறை சம்பந்தமான நடவடிக்கை
வேடிக்கையாக இருக்கும். காத்திருப்பு, ஆயுதப்படைக்கு மாற்றம்
இப்படித்தான் இருக்கும். அபூர்வமாக பணியிடை நீக்கம். கைது செய்திருக்கிறார்கள். பிணை கிடைத்து விடும். குற்றம் செய்தாரா
என்று தெரியாது. அவர் இப்போது இல்லை. மக்கள் இனி யாரை
நம்புவார்கள்?
பாபநாசம் நடராஜன்