மணிப்பூர் கலவரம் அதன் அடுத்தக் கட்டத்தைத் தொட்டிருக்கிறது. இரண்டு மாதங்களாக அது வேறு ஏதோ தேசத்தின் பிரச்னை என்பது போல அமைதி காத்து வந்த பிரதமர் இப்போது முதல் முறையாக மணிப்பூர் குறித்துப் பேசியிருப்பதிலிருந்து இதனை உணரலாம்.
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான பிரச்னையாக ஆரம்பித்த இக்கலவரம் இன்று வட கிழக்கு மாநிலங்கள் அனைத்தையுமே பாதிக்கக்கூடிய ஒன்றாகப் பெரிதாகி இருப்பதற்கு மணிப்பூரை ஆளும் பாஜக அரசைத்தான் காரணம் சொல்ல முடியும். நேர்மையான மத்திய அரசாக இருக்குமானால், இந்நேரம் மணிப்பூரில் ஆட்சிக் கலைப்பு செய்து, ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைக்குக் கொண்டு வரப் பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், இல்லை. கொடூரங்கள் இன்னும் அதிகரித்து மொத்த தேசமும் கொந்தளிக்கும் வரை வேடிக்கைதான் பார்ப்பார்கள் போலிருக்கிறது.
Add Comment