2018-ஆம் ஆண்டிலிருந்து கேரளாவை மூன்று முறை கதிகலங்க வைத்துவிட்டுச் சென்ற ஒரு வைரஸ், நான்காவது முறையாக மீண்டும் தனது அடுத்த ஆட்டத்தினை ஆடத் துவங்கியுள்ளது. முதன் முதலாக 1999-ஆம் ஆண்டு மலேசியாவில் சுங்காய் நிபா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிபா வைரஸ் (Nipah virus) தான் அது.
இரண்டு துணை வகைகள் (Two strains of Nipah viruses)
நிபா வைரஸில் இரண்டு முக்கிய துணைவகைகள் (Strains) உண்டு. மலேசியாவில் கண்டறியப்பட்ட மேலே கூறப்பட்டுள்ள வைரஸ் முதல் துணைவகை. இரண்டாவது பங்களாதேஷில் கண்டறியப்பட்டது. பின்கூறிய துணைவகை வைரஸ் மலேசிய துணைவகை வைரஸை விடவும் வீரியமிக்கது. மலேசியத் துணைவகை வைரஸ் தாக்கிய ஒருவருக்கு மூளை வீக்கம் (Encephalitis) மற்றும் அதனுடன் தொடர்புடைய சுயநினைவிழப்பு (Decreased consciousness), காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவை மட்டுமே அறிகுறிகள். ஆனால் பங்களாதேஷ் வைரஸ் தாக்கியவர்களுக்கு மேற்கூறிய அறிகுறிகளுடன் சேர்த்து சுவாசக் கோளாறுகள், தசை வலி மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் (Heart muscle dysfunction) ஏற்படுவதால் இந்த வகை வைரஸ் தாக்கியவர்களின் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.
Add Comment