பாரம்
நீண்ட நாள்களுக்குப் பிறகு முகமது குட்டியைப் பார்த்தேன். எப்போதும் போல். சினேகமான புன்னகையுடன் முகமன் கூறினான். அவன் அருகில் இளைஞன் ஒருவன் நின்றிருந்தான்.
‘மேடம், இது அப்துல். என்னுடன் வேலையில் உதவியாளராகச் சேர்ந்திருக்கிறான்’ என்று அப்துலை அறிமுகம் செய்தான்.
அப்துல், மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹிங்கியா இளைஞன். முகமது குட்டி காபி போடச் சென்றபோது, ‘மியான்மரின் எந்தப் பகுதி அப்துல்?’ என்று பேச்சைத் தொடங்கினேன்.









Add Comment