ரகுராம் ராஜன்
உலகப் புகழ்பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞர்களில் மிக முக்கியமானவர் ரகுராம் ராஜன். இந்தியாவின் நிதித்துறையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தவர். சர்வதேச நிதி ஆணையத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராகவும் ஆராய்ச்சி இயக்குநராகவும் இளம் வயதிலேயே பணியாற்றியவர். 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த உலகப் பொருளாதார வீழ்ச்சியை மூன்றாண்டுகளுக்கு முன்னரே தனது ஆய்வுகளின் அடிப்படையில் கணித்துச் சொன்னார்.
ரகுராம் 1963ஆம் ஆண்டு மத்தியப்பிரதேசத் தலைநகர் போபாலில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். இந்திய உளவுத்துறையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் அவருடைய தந்தை கோவிந்தராஜன். ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய அப்பா உலக நாடுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்க, அம்மா மைதிலியின் கவனிப்பில் வளர்ந்தார். அப்பாவின் பணி நிமித்தமாகச் சிறு வயதிலேயே பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவானது.
வெளிநாட்டுப் பணிகளிலிருந்து விலகி 1974ஆம் ஆண்டு குடும்பத்துடன் இந்தியா திரும்பியது ரகுராமின் குடும்பம். 1981ஆம் ஆண்டு டெல்லி பப்ளிக் ஸ்கூலில் தன்னுடைய பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரம் பயில வேண்டுமென்பது அவருடைய கனவாக இருந்தது அவருடைய அம்மாவுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. அவர் அரசியலை நோக்கிப் போய்விடுவாரோ என்ற பயம்தான் காரணம்.










Add Comment